சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை Mi 10T தொடரில் அறிமுகம் செய்யவுள்ளது என்பதை உறுதிப்படத் தெரிவித்திருந்தது. இப்பொழுது சியோமி நிறுவனம் அதன் Mi 10T தொடரில் உள்ள Mi 10T, Mi 10T ப்ரோ மற்றும் Mi 10T லைட் ஆகின மூன்று மாடல்களை வரும் செப்டம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.
Mi 10T தொடர் எப்போது அறிமுகம்
சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ஆன்லைன் நிகழ்வின் மூலம் Mi 10T தொடரின் கீழ் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதன்படி, சியோமி நிறுவனம் Mi 10T தொடரில் Mi 10T, Mi 10T Pro மற்றும் Mi 10T Lite ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது என்று தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லைவ் எப்போ பார்க்கலாம்? எங்கே பார்க்கலாம்?
இந்த அதிகாரப்பூர்வ தகவல் சியோமியின் டிவிட்டர் பக்கத்தின் வழி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிவிட்டர் பதிவின்படி சியோமியின் இந்த அறிமுக நிகழ்வு இந்திய நேரத்தின்படி மாலை 5:30 PM அளவில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் Mi.com இல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
Mi 10T மற்றும் Mi 10T Pro
Mi 10T மற்றும் Mi 10T Pro ஆகியவை பஞ்ச் ஹோல் டிஸ்பிளேயுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mi 10T Pro 144 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் வரவிருக்கிறது என்று வதந்தி பரவியுள்ளது. புதிய போன்கள் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
108 மெகாபிக்சல் கேமரா
புதிய Mi 10T சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பக்கவாட்டில் தான் இந்தமுறை கைரேகை சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Mi 10T Pro ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Mi 10T ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 765G 5ஜி
முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 765G 5ஜி சிப்செட் உடன் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக Mi 10T லைட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Mi 10T லைட் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் பிற தகவல்கள் பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
விலை என்னவாக இருக்கும்?
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, Mi 10T Pro ஐரோப்பியச் சந்தைகளில் 699 யூரோ விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் விபரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக