Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 செப்டம்பர், 2020

Nokia 7.3 : இது பழைய மாதிரி இல்ல.. வேற மாதிரி வந்து நிக்கும் நோக்கியா!

நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் வழியாக கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், வெளியான ரெண்டர் புகைப்படங்களானது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனை எல்லா கோணங்களிலிருந்தும் காட்சிப்படுத்துகின்றன.

அதன்படி, இது குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இது 5 ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் முந்தைய வதந்திகள் தெரிவிக்கிறது

நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் ஆனது ஐஎஃப்ஏ 2020 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் அது 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று மற்றொரு அறிக்கை கூறியது.

எனவே நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை பற்றி, தற்போது வரையிலாக எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும் கூட, வதந்திகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை.

தற்போது வெளியாகியுள்ள நோக்கியா 7.3 ரெண்டர்களை ஐபிஇஇ வேர்ல்டுடன் ஒத்துழைத்த ஒன்லீக்ஸ் (OneLeaks) என்றும் அழைக்கப்படும் பிரபல டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெமர்ஸ்டோஃபர் மூலம் பகிரப்பட்டுள்ளது.

வெளியான ரெண்டர்களில், புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டுடன் ஒரு தட்டையான டிஸ்பிளேவை காண முடிகிறது.

நோக்கியா பிராண்டிங் ஆனது ஸ்மார்ட்போனின் கன்னத்தில் காணப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் வலது பக்கத்தில் அமைந்துள்ளன.


ஸ்மார்ட்போனின் கீழ் பக்கம் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட், மைக் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஒன்றும் உள்ளது.

பின்புறத்தில், ஒரு வட்ட வடிவிலான கேமரா தொகுதிக்குள் ஒரு குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமரா அமைப்பில் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. மேலும் இதில் ஒரு வட்ட வடிவிலான கைரேகை ஸ்கேனர் ஆனது கேமரா தொகுதிக்குக் கீழே காணப்படுகிறது.

நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனில் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:

நோக்கியா 7.3 மாடல் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் மற்றும் ஹோல் பஞ்ச் கட்அவுட்டுடன் 6.5 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 SoC மூலம் இயக்கப்படும் என்று IPEEWorld அறிக்கை கூறுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 24 மெகாபிக்சல் செல்பீ ஸ்னாப்பர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். ஸ்மார்ட்போனின் பின்புறம் பிளாஸ்டிக் வடிவமைப்பை பெறும், கண்ணாடி வடிவமைப்பை அல்ல என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான சமீபத்திய வதந்தியின் படி, நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் அளவீட்டில் சுமார் 165.8 x 76.3 x 8.2 மிமீ இருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் ஐஎஃப்ஏ 2020 இல் அறிமுகப்படுத்தப்படவிருந்தது, ஆனால் பின்னர் இந்த தொலைபேசி 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக