Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 அக்டோபர், 2020

1.4 பில்லியன் டாலர் முதலீடு.. கூகிள் பே, பேடிஎம், போன்பே-வுக்குச் செக் வைக்கும் அமேசான்..!

மொத்த முதலீட்டு 

இந்திய ரீடைல் சந்தையின் வர்த்தகத்திற்காகக் கைப்பற்ற மிகப்பெரிய போட்டி நடந்து வருகிறது, இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனத் திட்டமிட்டு வரும் அமெரிக்க நிறுவனமான அமேசான்.

தற்போது இந்தியாவை முக்கிய வர்த்தக இலக்காகக் கருத்தில் கொண்டு ரீடைல் வர்த்தகம் சார்ந்து இருக்கும் அனைத்து சேவை பிரிவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய ஸ்டார்ட்அ பூம்-ஆகக் கருதப்படும் பின்டெக் துறையில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அமேசான் தனது அமேசான் பே தளத்தில் புதிதாக 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது எனப் பேப்பர்.விசி தெரிவித்துள்ளது.

 அமேசான் பே

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் தனது தாய் நிறுவனமான அமேசான் மூலம் எப்போதும் போல் பகுதி பகுதியாக முதலீடு செய்யாமல் இந்த முறை 1.4 பில்லியன் டாலர் தொகையை ஒற்றை முறையில் முதலீடு செய்ய அமேசான் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த முதலீட்டு

இந்த மாபெரும் முதலீட்டின் மூலம் அமேசான் பே அடுத்த சில மாதங்களில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றுவது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் வெறும் 820 மில்லியன் டாலராக இருந்த அமேசான் பே தளத்தின் முதலீட்டு அளவு இப்புதிய 1.4 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் மொத்த முதலீட்டு அளவு 2.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அமேசான்.காம்

இந்த முதலீடு திட்டம் குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருக்கும் நிலையில், இத்திட்டம் நிறைவேறினால் அமேசான் இந்தியாவில் செய்யும் அதிகப்படியான ஒற்றை முதலீடாக (Single investment) இருக்கும் என்றும் பேப்பர்.விசி தெரிவித்துள்ளது.

பேடிஎம்

இதுமட்டும் அல்லாமல் இந்திய பின்டெக் துறையில் செய்யப்படும் அதிகப்படியான முதலீடாகவும் இது இருக்கும். 2017ல் பேடிஎம் நிறுவனம் 1 பில்லியன் டாலர் தொகை முதலீடு செய்யப்பட்டதே பின்டெக் துறையின் அதிகப்படியான ஒற்றை முதலீடாக இன்று வரையில் உள்ளது. தற்போது அமேசான் 1.4 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தால் முதலீட்டிலும் புதிய உச்சத்தை அமேசான் அடையும்.

போட்டி

ஏற்கனவே இந்திய பேமெண்ட் சந்தையில் கூகிள் பே சுமாப் 38.4 சதவீத சந்தையைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் அமேசானின் இந்த 1.4 பில்லியன் டாலர் முதலீடு குறித்த பேச்சுவார்த்தை சக பேமெண்ட் நிறுவன மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கூகிள் பேவுக்கு அடுத்தாகப் போன்பே, அமேசான் பே, பேடிஎம், வாட்ஸ்அப் பே ஆகிய நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகப் போட்டி போட்டு வரும் நிலையில் இப்புதிய முதலீட்டின் மூலம் அமேசான் கூகிள் மற்றும் போன் பே வர்த்தகத்தைப் பெரிய அளவில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்

அமேசான் தற்போது இந்திய ரயில்வே துறையில் ஈசேவை அமைப்பான் IRCTC உடன் கூட்டணி சேர்ந்து ரயில் டிக்கெட் உட்படப் பல்வேறு சேவைகளைத் தனது அமேசான் தளத்தில் விற்பனை செய்ய உள்ளது. இக்கூட்டணியின் வாயிலாகவும் அமேசான் பல லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக