Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 அக்டோபர், 2020

கும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-2021.. பாகம் - 11

 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலமான ஆண்டு  | 2020 New year Rasi Palangal for Kumbam Rasi - Tamil Oneindia

குணம் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே..!!நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் இதுவரையில் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ரோக சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

புதிய வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி முடிவு கிடைக்கும். இன்சூரன்ஸ் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும்.

 

பெண்களுக்கு :

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த கால தாமதங்கள் அகலும். புதிய வேலை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களின் மூலம் பொருளாதார உயர்வு உண்டாவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து இன்ப சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.

 

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். கல்வி பயிலும் இடங்களில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உயர்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவமும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும், எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் காரியத்தை நிறைவேற்றி கொள்ள இயலும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

 

விவசாயிகளுக்கு :

விவசாய பணிகளில் இருந்துவந்த தொய்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவிகள் மூலம் பொருளாதார உயர்வு உண்டாகும். வங்கி தொடர்பான எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

 

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

 

வியாபாரிகளுக்கு :

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும்.

 

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி அடைந்த குருமார்களை வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக