🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், புதன் நட்பு என்ற நிலையில் நிற்கின்றார். இந்நிலையில் புதனால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் விரிவாக காண்போம்.
🌟 பலவிதமான திறமைகளை உடையவர்கள்.
🌟 வீண் செலவுகளை தவிர்த்து அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்பவர்கள்.
🌟 ஆன்மீக பணிகளின் மீது அதிக ஈடுபாடு உடையவர்கள்.
🌟 தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
🌟 விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இவர்களுக்கு இருப்பதால் அனைவராலும் விரும்பக்கூடிய நபராக இருப்பார்கள்.
🌟 தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.
🌟 தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்களே தவிர மற்றவர்கள் அதை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான திட்டங்களையும் வகுத்து கொண்டிருப்பவர்கள்.
🌟 எதையும் முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.
🌟 உடன் இருப்பவர்களை பற்றி நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.
🌟 நிறைவான நினைவாற்றலையும், தன்னை நம்பியவருக்கும் உதவியவருக்கும் எந்நிலையிலும் தீங்கு நினைக்காதவர்கள்.
🌟 சுகமான நித்திரை சுகம் உடையவர்கள்.
🌟 சிலருக்கு தந்தை வழி தொழிலை மேற்கொள்ளும் அமைப்பும், அவரின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.
🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமையை உடையவர்கள்.
🌟 கோபத்தை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கையாளக்கூடியவர்கள்.
🌟 பொது நலத்தில் சுயநலமின்றி செயல்படக்கூடியவர்கள்.
🌟 சிறந்த நிர்வாக திறனும், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் மனப்பான்மையும் உடையவர்கள்.
🌟 கணக்கு வழக்குகளில் புள்ளி விவரமாக இருக்கக்கூடியவர்கள்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக