ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது.
நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன.
இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது.
ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது.
என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது.
நீதி :
மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக