Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பானை குட்டி போடுமா? முல்லாவின் வியக்க வைக்கும் பதில்... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

------------------------------------------------------------------

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா?

கணவன் : எப்படி கண்டுபுடிச்ச?

மனைவி : உங்க அம்மாக்கிட்ட உள்ள வீரத்துல நூறுல ஒரு பங்கு கூட உங்கக்கிட்ட இல்லையே..!

கணவன் : 😏😏

------------------------------------------------------------------

பொன்மொழிகள்...!!

------------------------------------------------------------------

உதிக்கும்போதும், மறையும்போதும் ரசிக்கும் உலகம்...

உச்சிக்கு வந்தால் திட்டித்தீர்க்கும்.

சூரியனை மட்டுமல்ல... மனிதனின் வளர்ச்சியையும் கூட...

 

தீப்பெட்டியின் கடைசிக் குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம்...

முதல் தீக்குச்சியிலேயே வந்துவிட்டால் வாழ்க்கையில் எளிதாக ஜெயித்து விடலாம்.

------------------------------------------------------------------

பேராசை பெரும் நஷ்டம்...!!

------------------------------------------------------------------

⭐ முல்லா ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார். பக்கத்து வீட்டுக்காரர் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார். அடுத்த நாள் காலையில், உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவம் முடிந்து, உங்கள் பானை ஒரு குட்டிப் பானையை ஈன்றெடுத்தது என சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.

 

⭐ பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை ஆச்சரியமாக இருந்தாலும் வரவை விடவேண்டாமென்று சும்மா இருந்துவிட்டார். அதே போல் மீண்டும் அவரிடமிருந்து ஒரு பெரிய பானையை கடனாக வாங்கி மறுநாள் அதே போல் அந்தப் பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானை ஒன்றைக் கொடுத்து அந்த பெரிய பானைக்கு புதிய குழந்தை பிறந்திருக்கிறது என்று கொடுத்தார்.

 

⭐ அதனைப் பெற்றுக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் சந்தோஷம் அடைந்தார். அதற்கடுத்த வாரம் முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம், பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையைக் கொடுத்தார். இம்முறை முல்லா பானையை திருப்பித் தரவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் போய் கேட்டார். அதற்கு முல்லா மன்னிக்க வேண்டும். உமது பானை பிரசவத்தின்போது இறந்து விட்டது என்றார். உடனே பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? என்று கேட்டார்.

 

⭐ அதற்கு முல்லா நான் ஏமாற்றவில்லை. பானை கர்ப்பமாக இருந்து குட்டிப் போட்டது என்று நான் உங்களிடம் குட்டிப் பானையைக் கொடுத்தபோது வாங்கிக் கொண்டீர்கள் அல்லவா? என்றார். அது உண்மை என்றால் இப்போது பானை இறந்தது என்பதும் உண்மையே என்றார். பக்கத்து வீட்டுக்காரர் எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக