Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 அக்டோபர், 2020

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

வைஃபை, ஜிபிஎஸ், 3.5

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. சிறந்த கேமரா மற்றும் மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு மாலி-ஜி72 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் 5கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4 ஜி வோல்டிஇ,புளூடூத் 5, வைஃபை, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ரூ.16,499-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக