Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 அக்டோபர், 2020

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 அறிமுகமாகுவதில் தாமதம்... 250சிசி பைக் திட்டம் ரத்து..?

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் அறிமுகமாகுவதில் தாமதம்... 250சிசி பைக் திட்டம் ரத்துசெய்யப்பட்டுவிட்டதா...?

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ன் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனத்தின் 250சிசி பைக் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2018ல் இருந்து கிட்டத்தட்ட சுமார் 2 வருடங்களாக சோதனைகளில் உட்படுத்தப்பட்டுவரும் ராயல் என்பீல்டின் புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக்குகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிரமாக வடிவமைக்கப்பட்டு வந்தன.

ஆனால் இது 2020 அக்டோபர், இருப்பினும் இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையில் அறிமுகமாகுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தயாரிப்பு பணிகளில் தாமதம் மற்றும் திறன் விரிவாக்கம் உள்ளிட்டவை தயாரிப்பு நிறுவனத்தை இவ்வாறான இடைகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளன.

இந்த வகையில் இந்த ராயல் என்பீல்டு பைக்குகளின் அறிமுகம் தள்ளிப்போகவுள்ளது. தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக வரும் மீட்டியோர் 350 வரப்போகும் பண்டிகை காலத்திற்கு அறிமுகமாகி இருந்ததால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு அறிமுகமாக வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கிளாசிக் 350 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகலாம். இவை மட்டுமின்றி தற்சமயம் திட்டம்-வி என அழைக்கப்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய எண்ட்ரீ-லெவல் 250சிசி பைக், மொத்த விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதை விட இலாபத்தை பெறவே தயாரிப்பு நிறுவனம் எண்ணுவதால் இந்த திட்டம் மொத்தமாக நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில் ஒரு மாதத்தில் குறைந்தது 50,000 பைக்குகளையாவது விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தயாரிப்புகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை திருத்தியமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. புதிய தலைமுறை கிளாசிக் 350 புதிய மாடுலர் ஜே ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சற்று பழமையான தோற்றத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய கிளாசிக் 350-ல் என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதனால் அதே 350சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் தொடரவுள்ளது. இதே என்ஜின் தான் மீட்டியோர் 350-லும் வழங்கப்படவுள்ளது.

இந்த ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை மீட்டியோரில் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த என்ஜின் புதிய தலைமுறை கிளாசிக் 350-ல் ஏதாவது மாற்றத்திற்கு உள்ளாகி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக