Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஒரே ஒரு மீன், 52 கிலோ... 3 லட்ச ரூபாய் சம்பாதித்த மீனவ பெண்மணி!

 


மேற்கு வங்காளத்தின் தென் பகுதியில் இடம் பெற்றிருக்கும் சாகர் தீவில் மீனவ பெண்மணி ஒருவர் 52 கிலோ எடை கொண்ட ஒரு மீனை பிடித்துள்ளார். மேலும், இந்த மீனை ஒரே இரவில் 3 இலட்ச ரூபாய்க்கும் விற்றுள்ளார். இதனால், ஒரே இரவில் இவர் இலட்சாதிபதி ஆகியுள்ளார்.

உள்ளூர் மக்களிடம் விசாரித்த போது, அந்த 52 கிலோ மீனை, கிலோ 6200 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்றுள்ளார் அந்த மீனவ பெண்மணி என்று கூறப்படுகிறது. மேலும், அந்த ஒரே ஒரு மீனை வைத்து அவர் 3 லட்ச ரூபாய் சம்மதித்துள்ளார் என்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

புஷ்பா கர் எனும் அந்த பெண்மணி சக்ஃபுல்தூபி எனும் கிராமத்தை சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது.கடந்த சனிக்கிழமை ஆற்றில் ஒரு பெரிய மீனை இவர் கண்டுள்ளார். உடனே, ஆற்றில் குதித்து அந்த மீனை பிடித்துள்ளார். தனது உடல் வலிமைக்கு மீறிய போதும், கஷ்டப்பட்டு அந்த மீனை கரைக்கு எடுத்து வந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணுக்கு மீனை தூக்க  உதவியுள்ளனர். போலா என்ற வகை என்று கூறப்படும் அந்த மீனை, சந்தைக்கு எடுத்து செல்ல பொதுமக்கள் உதவியுள்ளனர். மீன் சந்தையை நன்கு அறிந்தவர்கள், இந்த மீன் மிகவும் விலை உயர்ந்தது. இதன் உடல் பாகங்களில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தெற்காசிய பகுதிகளில் இந்த மீன் அதிக விலைக்கு போகிறது என்றும் கூறுகிறார்களாள்.

சிலர், இந்த மீன் கிலோ 80 ஆயிரம் வரை போகும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படியோ, அந்த மீனவ பெண்மணிக்கு ஒரே நாளில் 3 லட்ச ரூபாய் சம்பாதித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த 2020 வருடத்தில் பெருமளவு சந்தோஷத்தை அனுபவித்த முதல் நபர் அந்த பெண்மணியாக இருக்கக்கூடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக