குத வலி மற்றும் குத பிளவு ஏற்படுவதற்கான ஆறு காரணங்கள் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குத பிளவு அதிகப்படியான வலி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.சில நேரங்களில், ஓர் சில நபர்கள் இந்த வலியுடன் நீண்ட காலம் பயணிக்கின்றனர். ஏனெனில் இந்த பிரச்சனையைப் பற்றி பிறர் இடமோ அல்லது மருத்துவர் இடமோ சொல்வதற்கு அவர்கள் வெட்கப்படுகிறார்கள். குத பிளவு என்பது ஆசன வாயில் உள்ள மெல்லிய, ஈரமான திசுக்களில் (முகோஸா) ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிளவு ஆகும்.
காரணங்கள்
இந்த பிளவு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம் . அவற்றுள் சில மலச்சிக்கல், கடினமான மலம் போன்றவை. பல சந்தர்ப்பங்களில் இந்த பிளவுகள், ஆசன வாயிலிருந்து எரிச்சல், வலி மற்றும் இரத்தப் போக்குக்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். நாள் முழுவதும் தொடர்ந்து உங்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடிய இந்த பிரச்சினையுடன் நீங்கள் நாட்களை கடப்பது அவ்வளவு சுலபம் அல்ல. மேலும், இந்த பிரச்சினை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இது தவிர, சிலர் ஆசன வாய் அல்லது குத சுழற்சியின் (ஆனல் ஸ்பின்ச்டர) முடிவில் தசை பிடிப்பை அனுபவிக்கக் கூடும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு குத பிளவு மிகவும் பொதுவானது. ஆனால், இந்த குத வலி மற்றும் குத பிளவு, எந்த வயதினரையும் பாதிக்கும். அதிபடியான நார்ச்சத்து உட்கொள்ளல் அல்லது சிட்ஸ் பாத் போன்ற எளிய சிகிச்சைகள் மூலம் இந்த குத பிளவுகளை சரி செய்யலாம். சிலருக்கு மருந்துகளும் தேவைப்படலாம். மேலும், இதன் தீவிரம் அதிகரித்தால், அந்த சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சைக் கூட தேவைப்படலாம்.
அறிகுறிகள்
குத வலி மற்றும் குத பிளவு ஆகியவற்றின் சில அறிகுறிகள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டு உள்ளன,
- மலம் கழிக்கும் போது ஏற்படக்கூடிய கடுமையான வலி
- மலம் கழித்த பிறகு ஏற்படுக்கூடிய வலி. மேலும் இந்த வலியானது பல மணி நேரம் வரை நீடிக்கும்.
- சில சமயம் மலம் கழிக்கும் போது அதனுடன் இரத்தம் சேர்ந்து வரும்
- ஆசன வாய் சுற்றி ஏற்படும் அரிப்பு அல்லது எரிச்சல்
- ஆசன வாயைச் சுற்றி உள்ள தோலில் தெரியும் விரிசல்
- குத பிளவுக்கு அருகில் உள்ள தோலில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய கட்டி அல்லது மருக்கள்.
குத வலி மற்றும் குத பிளவு சில காரணங்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பருவம்
குழந்தைகளுக்கு குத பிளவு பொதுவானது. ஓர் சில குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் குத பிளவுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான காரணம் மருத்துவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அவர்களின் மலம் கழிக்கும் செயல் சீரான உடன் இது காலப்போக்கில் மறைந்து விடும்.
முதுமை:
வயதானவர்களுக்கு, மெதுவான இரத்த ஓட்டத்தின் காரணமாக லேசான குத பிளவு ஏற்படக்கூடும். இதன் விளைவாக மலக்குடல் (ரெக்டல்) பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைகிறது.
மலச்சிக்கல்
மலம் கழிக்கும் போது சிரமப்படுவதும், மற்றும் திடமான மலத்தை கழிப்பதும் குத ஜவ்வைக் கிழிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இந்த கிழிந்த ஜவ்வானது குணமடையாத போது, இது பிளவுகளுக்கு வழிவகுக்கும்.
பிரசவம்
குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு பெண்களுக்கு அனல் பிளவுகள் அதிகம் காணப்படுகின்றன. கர்ப்ப காலத்தில், மூலம் (எமராய்ட்ஸ்) போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் கர்ப்பத்திற்குப் பின் குத பிளவுகளுக்கு ஆளாகிறார்கள்.
கிரோன் நோய்:
இந்த இன்ஃப்ளேமேட்டரி நோய், குடல் நாளத்தின் நீண்ட கால (கிரானிக்) அழற்சியை ஏற்படுத்துகிறது. இது ஆசன வாய் பகுதியில் கிழியல் ஏற்படுவதற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
குத உடலுறவு
குத செக்ஸ் என்பதை சாதாரண உடலுறவாக பெரும்பாலான மக்கள் கருதாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் இது ஆசன வாய்யை கிழிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இப்பகுதியில் மாய்ஸ்சரைசர் இல்லை என்பதால், இது கிழியல் மற்றும் வெட்டுக்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது ஒரு வலிமிகுந்த நிகழ்வாக மாறும்.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக