Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 அக்டோபர், 2020

அதிர வைத்த 63 வயது பெண்ணின் செயல்: 19 வருடமாக செய்த ஏமாற்று வேலை அம்பலம்!

அதிகரிக்கும் ஆன்லைன் பழக்கம்

ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த 63 வயது பெண்ணை கையும் களவுமாக கைது செய்த போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகரிக்கும் ஆன்லைன் பழக்கம்

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

ஆன்லைன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்ட 63 வயது பெண்

இந்த நிலையில் அமெரிக்காவில் பெண் ஒருவர் ஆன்லைன் விற்பனையில் சதி வேலை செய்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கா டல்லாஸ் பகுதியில் வசித்து வருபவர் கிம் ரிச்சர்ட்சன். 63 வயதான இவர் இபே என்ற ஆன்லைன் தளத்தில் பொருட்கள் விற்று வந்துள்ளார்.

ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை

இந்த நிலையில் 63 வயதான கிம் ரிச்சர்ட்சன் இபே ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்து வந்த பொருட்கள் கடைகளில் திருடப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து கிம் ரிச்சர்ட்சனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடையில் இருந்து திருடி ஆன்லைன் தளத்தில் விற்பனை

சுமார் 19 ஆண்டுகளாக கிம் ரிச்சர்ட்சன் பொருட்களை கடையில் இருந்து திருடி ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்துவந்துள்ளார் என்பது இதையே தொழிலாக வைத்துள்ள அவர், இதில் கிடைக்கும் பணத்தை வைத்து அமெரிக்க முழுவதும் சுற்றித் திரிந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கையும் களவுமாக பிடித்த போலீஸார்

கிம் ரிச்சர்ட்சனை கையும் களவுமாக பிடித்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு அவருக்கு 54 மாத சிறை தண்டனையும், திருடப்பட்ட பொருட்களுக்கு நஷ்டஈடாக 3.8 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக