
உலகெங்கும் பரவி வரும் கருப்பின மக்களின் வாழ்க்கை
முக்கியம் என்ற இயக்கத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா
தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில்
போலிசாரால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணம் உலகம் முழுவதும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கருப்பின மக்கள் நிம்மதியாக வாழும்
பொருட்டு black lives matter என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இது சம்மந்தமாக
பலதுறையினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.
கிரிக்கெட்டிலும் பல வீரர்கள் அந்த இயக்கத்துக்கு தங்கள் குரலைக் கொடுத்து
வந்தனர். இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை
இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி அரைசதம்
அடித்தார். அப்போது அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சில நொடிகள்
மண்டியிட்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக