Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 அக்டோபர், 2020

ரிஷப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், செவ்வாய் பகை கொண்டிருந்தாலும், ரிஷப ராசியில் செவ்வாய் சமம் என்ற நிலையில் நின்று ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு : மனைவியின் மீது மிகுந்த அன்பும், அன்யோன்யமும் உடையவர்கள்.

 மனைவியின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாதவர்கள். 

 மனைவியின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

 எளிதில் எதிலும் திருப்தி அடையாதவர்கள்.

  ஏற்ற, இறக்கமான வாழ்க்கை நிலையை உடையவர்கள்.

  மலையேற்றம் போன்ற பயணங்களை விரும்பக்கூடியவர்கள்.

  எதையும் மறைக்க தெரியாதவர்கள்.

  கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அனைத்தையும் கொட்டித் தீர்ப்பார்கள்.

  அடிக்கடி உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். 

  சம்பாதிக்கும் வல்லமை இருக்கும். அதே அளவிற்கு செலவு செய்வார்கள்.

  எதிர்பாலின மக்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

 பிரபலமானவர்களின் நட்புகள் மற்றும் ஆதரவுகளை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!