----------------------------------------------------------
கலக்கலான ஜோக்ஸ்...!!
----------------------------------------------------------
மேனேஜர் : எங்க பேங்க்-ல இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்..
வாடிக்கையாளர் : கொடுக்கிறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல சார்.. ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க?
மேனேஜர் : 😩😩
----------------------------------------------------------
கணவன் : வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி சோறு கேட்குறான், போட்டுட்டு வா.
மனைவி : அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதவெச்சு சொல்றீங்க?...
கணவன் : உன்ன மகாலட்சுமி, மகராசின்னு சொல்றானே அதான்?
மனைவி : 😡😡
----------------------------------------------------------
சிறிது... பெரிது...!!
----------------------------------------------------------
கொடுப்பது சிறிது என தயங்காதே...
பெறுபவருக்கு அது பெரிது...
எடுப்பது சிறிது என திருடாதே...
இழந்தவருக்கு அது பெரிது...!!
----------------------------------------------------------
மறக்கக்கூடாத 2 விஷயங்கள்...!!
----------------------------------------------------------
வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தை எப்பொழுதும் மறக்கக்கூடாது...
1. விரும்பி எது வந்தாலும் விட்டு விடாதே
2. விலகி எது போனாலும்பிடித்து கொள்ளாதே
----------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
----------------------------------------------------------
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
விளக்கம் :
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலும் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகி விடுகிறது.
----------------------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------------------
1. தொப்பை பையனுக்கு ஒரு வாசல். தோழனுக்கு இரண்டு வாசல். அது என்ன?
சட்டை.
2. தச்சர், கொத்தனார் செய்யாத தேர். தானே கிளம்பும் சித்திர தேர். அது என்ன?
புற்று.
3. உணவை எடுப்பான், எல்லோருக்கும் கொடுப்பான், ஆனால் தான் மட்டும் உண்ணமாட்டான். அவன் யார்?
அகப்பை.
4. உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும். அவன் யார்?
கழுதை.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக