Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

ஒரு ரயில் தடுமாறி தடுமாறி போச்சாம்.. ஏன்? இன்றைய கடி.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------------

சிரிக்க.... சிந்திக்க...!

--------------------------------------------------

மனைவி : இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க வேலைக்கு போக வேண்டாங்க.

கணவன் : சத்தியமா சொல்றேன்டி... என்ன நம்பு... எனக்கு வடகம் போட தெரியாது.

மனைவி : 😏😏

--------------------------------------------------

மனைவி : தூக்கத்தில ஏன் சிரிக்கிறீங்க?

கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா...!!

மனைவி : அப்புறம் ஏன் கத்துனீங்க? 

கணவன் : நடுவுல நீ வந்துட்ட... 

மனைவி : 😠😠

--------------------------------------------------

குட்டிக்கதை...!! 

--------------------------------------------------

ஒரு கிராமத்தில் அனில், சுனில் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவர்கள் ரயில் வண்டி மூலம் பயணித்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஓர் கைக்கடிகாரத்தை வாங்க திட்டமிட்டனர்.

 

ஓர் இளைஞன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, சில கடிகாரங்களை காண்பித்து அவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்றும், கடிகாரங்கள் தங்கத்தினால் ஆனது என்றும் கூறினார்.

அனிலுக்கு அந்த கடிகாரம் மிகவும் பிடித்துவிட்டது. அதை உடனடியாக வாங்க ஒப்புக்கொண்டான். அந்த கடிகாரத்தை வாங்க வேண்டாம் என சுனில், அனிலிடம் பல தடவை எச்சரித்தான்.

 

சுனில் உரைத்ததை, அனில் கவனிக்காமல் அந்த கடிகாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினான். சில நாட்களுக்கு பின்னர் அந்த கடிகாரத்தின் முள் நின்றுவிட்டது. அனில் அந்த கடிகாரத்தை பழுது பார்ப்பவரிடம் எடுத்து சென்றபோது, அந்த கடிகாரம் தங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை என்று பழுது பார்ப்பவர் கூறினார்.

 

அவனுடைய முட்டாள்தனமான செயலால் அவசர முடிவு எடுத்ததை நினைத்தும், நண்பனின் பேச்சை கேட்காததை நினைத்தும் மிகவும் வெட்கப்பட்டார் அனில்.

 

நீதி : மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

--------------------------------------------------

இன்றைய கடி...!! 

--------------------------------------------------

ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டாண்ட்டை முழுங்கிட்டா,

ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல....

ஏன்? 

.

.

.

.

ஏனா அவன் சாப்பிட்டது வாழைப்பழத்தை....😝😝

 

ஒரு ரயில் தடுமாறி தடுமாறி போச்சாம்.. ஏன்? 

.

.

.

.

ஏன்னா அது சரக்கு ரயிலாம்...😇😇

--------------------------------------------------

சிறந்த வரிகள்...!!

--------------------------------------------------

⚡ முடிந்த வரை வார்த்தைகளை விட,

மௌனங்களால் தண்டிக்க பழகுங்கள்...

 

⚡ மௌனங்களால் தண்டித்தால்,

வலிகள் மட்டும் தான்...

 

⚡ வார்த்தைகளால் தண்டித்தால்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக