கந்தன் என்பவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவன் தனியார் நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றினான். அவனது குடும்பம் விவசாயம் செய்து வரும் ஒரு நடுத்தர குடும்பமாகும். இவனுக்கு 15மைல் தொலைவில் மாமியார் வீடு உள்ளது.
ஒரு நாள் கந்தனின் தம்பி கதிரவன் சொந்த வேலைக்காக நகரத்திற்கு வரும் சூழ்நிலை உருவானது. வந்த வேலை முடிந்ததால் அப்படியே அண்ணன், அண்ணி, பிள்ளைகளை பார்த்து செல்வோம் என அண்ணன் வீட்டிற்கு வந்தான்.
அன்று கந்தன் வீட்டிலிருந்தான், ஆகையால் அண்ணா எனும் குரல் கேட்டு வெளியே வந்த கதிரவன் வாடா என அன்போடு வீட்டிற்குள் அழைத்து உக்கார வைத்து தனது மனைவியை அழைத்தான், அவள் கொழுந்தனை வாப்பா என்று அழைத்து விட்டு அவள் வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள். கதிரவனுக்கு பசி, அவன் தன் அண்ணியிடம் பசிக்குது அண்ணி சாப்பாடு இருந்தால் கொடுங்க என்று கேட்டான். கொஞ்ச நேரம் கழித்து பழைய சோறும் வெங்காயமும் எடுத்து வைத்தாள். கதிரவனும் சாப்பிட்டு விட்டு, அண்ணி நான் புறப்படுகிறேன். என அண்ணியிடம் கூறிவிட்டு.
அண்ணனிடம் அப்பா உங்களை குடும்பத்துடன் திருவிழாவிற்கு வரச் சொன்னாங்க என்றான். என்னடா தம்பி நம்ம ஊரு திருவிழாக்கு வராம இருப்போமா? என்றான். மறுபடியும் தனது மனைவியை அழைத்தான். கதிரு ஊருக்கு போறானாம காசிருந்தா பஸ்சுக்கு கொடுத்தனுப்புமா என்றான். இங்க என்ன பணம் மரத்திலாய காய்க்குது என்றவள்.
இந்தா பணத்தை வாங்கிக்கோ என கதிரவன் கையில் திணித்தால், கந்தனும் வாங்கிக்கோடா என்றான். அண்ணியின் தம்பி வீட்டிற்கு வந்தான், அப்படியே அக்காவை பார்த்துவிட்டு போகலாம் என வீட்டின் கதவை தட்டவும் பூவிழி கதவை திறந்து பார்த்து கணவனை நோக்கி என்னங்க, என் தம்பி மணி வந்திருக்கான் பாருங்க. போயி கூல்ரிங்க்ஸ் வாங்கியாங்க என்றாள்.
ஊரில் அம்மா, அப்பா, மல்லிகா எப்படியிருக்காங்க. என்று விசாரித்தவள். பேசிக்கொண்டே சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு, கணவனையும், தம்பியையும் உக்காரவைத்து சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும் அக்காவும், தம்பியும், ஊர் கதை, உறவு கதை என பேசிக் கொண்டிருந்தனர். பின் மணி அக்கா, மாமா, நான் புறப்படுறேன் என கூறி புறப்பட்டான். உடனே பூவிழி இருநூறு ரூபாய்களை எடுத்து தம்பியின் பாக்கெட்டில் வைத்தாள்.
காலையில் நம் தம்பி வந்தபோது அவள் நடந்து கொண்ட விதமும், இப்போது அவள் தம்பி வந்தபோது நடந்து கொண்ட விதமும், கந்தனுக்கு மனதிற்குள் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பின் இரவு நேரத்தில் தன் மனைவியிடம் நீ காலையில் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றான்.
உடனே அவள் கதிர் யாருங்க நம்ம புள்ள, என் தம்பி ஊருக்கு போய் வந்தவங்களை கவனிக்கவில்லை என்று சொன்னால் யாருக்கு அசிங்கம் உங்களுக்கு தானே என்றாள். இதற்கு அவன் ஒன்றும் பேசவில்லை.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக