வீட்டில் இருந்து நிரந்தரமாக பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்தே வேலை
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது ஆகியவை பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணையத்தேவையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையோடு அறிவித்து வருகின்றன.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கட்டாயம்
கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்து மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பிரதான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது, அலுவலகங்கள் இயங்கப்பட முடியாத நிலை தொடங்கியது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டம்
இதையடுத்து தங்களது ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தபடியே பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்க்கலாம்.
வீட்டில் இருந்தே பணி
கொரோனா பரவல் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்வதை நிரந்தரமாக தேர்ந்தெடுத்தால் அதற்கு அனுமதி வழங்க நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலைகளை புதிய வழியில் தொடர வேண்டிய கட்டாயம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அடுத்த ஜனவரி வரை திறப்பதாக இல்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் நமது வேலைகளை நாம் புதிய வழியில் தொடர வேண்டியதிருப்பதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்காவில் பல மாகாணங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஒரு விருப்பத்தை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பு
அதேபோல் கொரோனா தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிகக்குறைந்த அளவிலான ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்மையில் கூறினார்.
அலுவலகங்கள் திறக்க வாய்ப்பில்லை
மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதி வரை அலுவலகங்களை திறக்க வாய்ப்பில்லை என்றும் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
நிபுணர்களின் வழிகாட்டுதல்
நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் 2021 ஜூலை வரை ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பதாகவும், வீட்டு அலுவலக தேவைகளுக்கு ஊதியம் கூடுதலாக ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக