Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 7 அக்டோபர், 2020

சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனும், செவ்வாயும் நண்பர்கள் ஆவார்கள். அதனால் செவ்வாய் நட்பு நிலையில் நிற்கின்றார். அதனால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 

 வேகமான செயல்பாட்டை உடையவர்கள்.

 

 தன்னம்பிக்கை உடையவர்கள். 

 

 எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள். 

 

 நேர்மைக்கு கட்டுப்பட்டு தலை வணங்கக்கூடியவர்கள். 

 

 எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆனால், நிதானித்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையவர்கள்.

 

 தவறு என தெரிந்தால் அது மீண்டும் ஏற்படா வண்ணம் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.

 

 உழைப்பதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை.

 

 இவர்கள் சோம்பலை வெறுக்கக் கூடியவர்கள். 

 

 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள். 

 

 திடமான மனநிலையை உடையவர்கள். 

 

 மற்றவர்களை எளிதில் அடையாளம் அறிந்து, அதற்கேற்றார்போல் செயல்படக்கூடியவர்கள். 

 

 அசைவ உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள்.

 

 நிர்வாக திறமை உடையவர்கள்.

 

 எந்நிலையிலும், எவருக்கும் அடிபணியாதவர்கள்.

 

 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

 

 முரட்டு குணம் இருந்தாலும் மனதளவில் மென்மையானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!