Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 அக்டோபர், 2020

கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

👉 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் செவ்வாய் சமம் என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉 செயல்பாடுகளை செயல்படுத்துவதில் இருக்கும் தயக்கத்தை போக்கி தைரியம் அளிக்கக்கூடியவர்கள்.

👉 வெற்றி கொள்ளும் வரை விடாமுயற்சியை கைவிடமாட்டார்கள்.

👉 எதிலும் எங்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். 

👉 இனிமையான குரல் பலம் உடையவர்கள். 

👉 சிறந்த பேச்சாளர்களாக விளங்கக்கூடியவர்கள்.

👉 காலம் கடந்த பின்பு மனைவியை நேசிக்கக்கூடியவர்கள். 

👉 கலை ரசனை மிகுந்தவர்கள். 

👉 குழந்தைகள் மீது அதிக அன்பும், கவனிப்பும் கொண்டவர்கள்.

👉 சங்கீத துறையில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்கள்.

👉 யாருக்காகவும் தனது எண்ணங்களையோ, செயல்களையோ மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

👉 எங்கும் நியாயதிபதியாக விளங்கக்கூடியவர்கள். 

👉 சாமர்த்தியமான பேச்சுகளும், வேகமான செயல்பாடுகளும் உடையவர்கள். 

👉 வேலையாட்கள் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள். 

👉 விளையாட்டு துறையில் ஆர்வம் உடையவர்கள். 

👉 தொழிலில் சிறந்த நிர்வாகத்திறமை உடையவர்கள்.

👉 பல தொழிலை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்.

👉 சிலர் அரசியலில் ஈடுபட்டு செல்வாக்கு பெறுவார்கள். 

👉 தன்னுடன் இருப்பவர்களில் உதவி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு மட்டும் உதவக்கூடியவர்கள். 

👉 தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!