Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 அக்டோபர், 2020

கிளியின் பரிவும்... தெய்வத்தின் வரமும்... குட்டிக்கதை... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

-------------------------------------------

சோமு : என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செஞ்சு தருவா..

ராமு : உப்புமாவுல வண்டும், புழுவுமா இருக்குறப்பவே நினைச்சேன், சலிக்காமத்தான் செஞ்சிருப்பாங்கன்னு.!

சோமு : 😜😜

-------------------------------------------

பாலு : மச்சி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

மனோ : அந்தக்கொடுமைய ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

பாலு : காலாகாலத்துல பண்ணிடனும் மச்சி...

மனோ : எங்க மச்சி பொண்ணு பார்க்க போனா துவைக்கத் தெரியுமா? சமைக்கத் தெரியுமான்னு கேக்குறாங்க!

பாலு : இதெல்லாம் தெரியாம யார் பொண்ணு கொடுப்பா? தெரியும்னு சொல்ல வேண்டியதுதான?

மனோ : அட நீ வேற! பொண்டாட்டி புடைவை துவைக்கச்சொன்னா பரவால்ல... மாமனார், மாமியார் துணிகளையும் சேத்து துவைக்கணும்னு சொல்றாங்கப்பா!

பாலு : 😏😏

-------------------------------------------

மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே, மணியே-ன்னு கொஞ்சுறீங்க... குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே?

கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்கு பொய்யே வரமாட்டேங்குது!..

மனைவி : 😁😁

-------------------------------------------

கிளியின் நட்பு...!!

-------------------------------------------

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான். அம்பு குறி தவறி பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.

 

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

 

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது.

 

அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம்தான் பாதுகாப்பை கொடுத்தது. இப்போது காய்ந்துவிட்டது என்று விலகி செல்வது எவ்வளவு மோசமான செயல்? அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

 

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்... என்றார். அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

 

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக