Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 அக்டோபர், 2020

விரைவில் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்கும் இம்ரான் தாஹிர்: பரபரப்பு தகவல்

 imran tahir

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

 

கடந்த போட்டியில் தோனி செய்த சில அதிரடி மாற்றங்களால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த எட்டு போட்டிகளாக அணியில் இருந்தும் விளையாடாமல் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் விரைவில் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் தெரிவித்த போது இம்ரான் தாஹிர் விரைவில் அணிக்காக விளையாடுவார் என்று கூறினார்.

 

வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற நிலை இருப்பதால் இந்த சிக்கல் உள்ளது. இப்போதைக்கு வாட்சன், டூபிளஸ்சிஸ், சாம் கர்ரன் ஆகிய மூவரையும் அணியில் இருந்து தூக்க முடியாது. அதே நேரத்தில்
பிராவோவும் கடந்த போட்டியில் அருமையாக பந்து வீசியதோடு ஒரு ரன் அவுட்டும் செய்தார். பேட்டிங்கில் அவர் முதல் பந்தில் அவுட் ஆனாலும் அவரது பேட்டிங் நிச்சயம் எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தக் கூடியதுதான்.

 

எனவே நான்கு வெளிநாட்டு போட்டியாளர்களும் நல்ல முறையில் விளையாடி கொண்டிருப்பதால் புதிய வெளிநாட்டு போட்டியாளரை சேர்க்க முடியாத நிலை உள்ளது இருப்பினும் பிராவோவுக்கு பதில் ஏதாவது ஒரு போட்டியில் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!