Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 அக்டோபர், 2020

முன்னோக்கி செல்லும்போது கனிவாக இருக்க வேண்டும்... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------------

கடைக்காரர் : இந்த நாயோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட ஒரு காதை திருகினீங்கன்னா நீங்க சொல்றத கேக்கும்... இன்னொரு காதை திருகினீங்கன்னா இப்ப டைம் என்னன்னு சொல்லும்.

சீனு : 2 காதையும் திருகினா?

கடைக்காரர் : கடிச்சுக் கொதறிப்புடும் ராஸ்கல்!

சீனு : 😬😬

----------------------------------------------

ராமு : என்னோட அதிர்ஷ்டமான நாள் 7ஆம் தேதி, பேங்க்ல போய் 7,000 ரூபாய் எடுத்துக்கிட்டு ரேஸ்க்கு போனேன். அங்கேயும் 7 குதிரைங்க.

பாபு : ஜெயிச்சுதா?

ராமு : 7-வதா வந்துச்சு.

பாபு : 😂😂

----------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

----------------------------------------------

யாருக்காவது குழி தோண்ட போகிறாயா? இரண்டாக தோண்டு... உனக்கும் சேர்த்து...

முன்னோக்கி செல்லும்போது கனிவாக இரு... ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்...

நீர் அமைதியாக இருப்பதால், முதலைகள் இல்லை என்று எண்ணிவிடாதே...

பின் கண்ணாடி வழியே நடந்ததை பார்ப்பதைவிட, முன் கண்ணாடி வழியே முன்னாடி வருவதை பார்...

----------------------------------------------

அன்று... இன்று...!!

----------------------------------------------

அன்று : குறைந்த வருமானம்... நிறைந்த நிம்மதி...

இன்று : அதிக வருமானம்... குறைந்த நிம்மதி...

அன்று : கைவீசி நடந்தோம்... 

இன்று : கைப்பேசியுடன் நடக்கிறோம்...

அன்று : படித்தால் வேலை...

இன்று : படிப்பதே வேலை...

அன்று : ஓடினோம் வயிற்றை நிறைக்க...

இன்று : ஓடுகிறோம் வயிற்றை குறைக்க...

அன்று : உணவே மருந்து...

இன்று : மருந்தே உணவு...

----------------------------------------------

சிறந்த வரிகள்...!!

----------------------------------------------

⭐ அவநம்பிக்கைக்கும், நம்பிக்கைக்கும் இடைப்பட்டதுதான் வெற்றி...

⭐ சோதனைக்கும், போதனைக்கும் இடைப்பட்டதுதான் சாதனை...

⭐ துரோகத்திற்கும், தோழமைக்கும் இடைப்பட்டதுதான் நட்பு...

⭐ அழுகைக்கும், சிரிப்பிற்கும் இடைப்பட்டதுதான் மகிழ்ச்சி...

⭐ தோல்விக்கும், வெற்றிக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை...

⭐ பொய்க்கும், மெய்க்கும் இடைப்பட்டதுதான் உண்மை....

⭐ இரவுக்கும், விடியலுக்கும் இடைப்பட்டதுதான் உறக்கம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக