Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 10 அக்டோபர், 2020

அடடா! ட்ரூகாலர் செயலியில் இதெல்லாம் பண்ணலாமா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

செயலி ஆண்ட்ராய்டு மற்றும்

நம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பயன்பாட்டை உலகளவில் சுமார் 15 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் உங்களுக்குத் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த நபர் யார்? எங்கிருந்து அழைக்கிறார் என்று அவரின் அனைத்து தகவலையும் இந்த செயலி சொல்லிவிடும்.

ட்ருகாலர் (Truecaller) செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இலவச வெர்ஷன் மற்றும் ப்ரோ வெர்ஷன் என்ற கட்டண வெர்ஷனும் ட்ருகாலர் செயலியில் உள்ளது மேலும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுவருகிறது. அவை என்னவென்று சற்று விரிவாகப் பார்ப்போ

ட்ரூகாலர் அப்டேட்

கடந்த மே மாதம் ட்ரூகாலரின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்டது, இதன் மூலம் ஹோம்டேபில், நாம் அனைத்து மெசஜ்களையும் கால்களையும்,ஒரே லிஸ்டில் பார்க்க முடியும். மேலும் தற்போது இந்த அப்ளிகேஷனில் காலர் ஐடி,பாப்-அப் போல் இல்லாமல், ஸ்கீரின் முழுவதும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலர் ஐடி நன்மைகள்

குறிப்பாக முழு ஸ்க்ரீன் காலர் ஐடி இருப்பதால், ஏதேனும் ஒரு போன் கால் வரும்போது, கால் செய்பவர்களின் போட்டோவை இப்போது திரை முழுவதம் பெரியதாக காணலாம். பின்பு காலர் ஐடி கோட் செய்யப்பட்டதால், போனை எடுக்காமலேயே எந்த வகையான கால் என்பதை அடையாளம் காண முடியும். அது என்னவென்றால், நீலநிறத்தில் வந்தால், நமது காண்டாக்ஸ்ட் அல்லது தெரியதா நம்பரிலிருந்து வந்ததாக அர்த்தம். பின்பு பர்ப்பிள் நிறமாக இருந்தால் பிசினஸ் அல்லது டெலிவரி சர்வீஸிலிருச்து வந்ததாகவும், சிவப்பு நிறமாக இருந்தால் அது ஸ்பேம் கால்கள் என்றும் அர்த்தம். கோல்ட் கலராக இருந்தால் அவை அப்கிரேட் செய்யப்பட்ட கோல்ட் அக்கவுண்ட் கொண்ட நபர்களிடமிருந்து போன் வந்ததாக அர்த்தம்.

ஐஒஎஸ்-சாதனங்களுக்கான ஸ்பேம் மெசேஜ் பில்டர்

இதுவரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஸ்பேம் மெசேஜ் ஃபில்டராக ட்ரூகாலர் இருந்தது, ஆனால் அன்மையில் இந்த அம்சம் ஐஒஎஸ் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை பெற நீங்கள் உங்களது ஐபோனில் உள்ள ட்ரூகாலர் அப்ளிகேஷனை அப்டேட் செய்ய வேண்டும். பின்பு செட்டிங்க்ஸ்-பகுதிக்கு சென்று மெசேஜை தெர்ந்தெடுத்த பிறகு மெசேஜ் ஃபில்டரிங் என்பதை தேர்வுசெய்யவும். அதற்கு பிறகு வரும் எஸ்எம்எஸ் ஃபில்டரிங் ஆப்ஷனின் கீழ் ட்ரூகாலரைத் தேர்ந்தெடுக்கவும் அவ்வளவுதான்.

ஸ்பேம் ஆக்டிவிட்டி இன்டிகேடர் நன்மைகள்

இந்த ஸ்பேம் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (புள்ளிவிவரம்) அம்சம் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் ட்ரூகாலரால் அறிமுகம்செய்யப்பட்டது. இதில் 3வகையான தகவல்கள் உள்ளது. முதலில் ஸ்பேம் ரிப்போர்ட்ஸ், இது எத்தனை ட்ரூகாலர் பயனர்கள், ஸ்பேம் என குறிப்பிட்ட போன் காலை குறித்துள்ளார்கள் என காட்டுகிறது. இரண்டாவது கால் ஆக்டிவிட்டி, இதில் குறிப்பிட்ட அந்த ஸ்பேம் நம்பர் சமீபத்தில் செய்த போன் கால்களின் எண்ணிக்கையை பார்க்க முடியும், இதன் மூலம் அந்த நம்பர் எந்நதளவுக்கு ஸ்பேமர் என நீங்கள் அறியலாம். மூன்றாவது பீக் காலிங் ஹவர்ஸ் ஆகும், இதில் ஸ்பேம் நம்பர் எந்த நேரத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்.

கால் அலர்ட் நன்மைகள்

ட்ரூகாலர் செயலியில் ஏற்கனவே உள்ள மற்றும் எல்லாருக்கும் பிடித்த ஒரு முக்கியமான அம்சம், கால்அலர்ட் அம்சமாகும், இதன் மூலம் உங்கள போனில் கால் வருவதற்கு முன்பே அதை பற்றிய நோட்டிபிகேஷன் வந்துவிடும். மேலும் போன் கால் வருவதற்கு சில நொடிகள் முன்பு. உங்களது போனில் ஒரு ட்ரூகாலர் பாப்அப் தோன்றும், அதன்மூலம் உங்களுக்கு போன் செய்யும் நபரின் பெயரை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக