உணவுகள் ஆஸ்துமா தாக்குதலைத் தூண்டும் என்பதற்கு இன்னும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில உணவுகளின் மேல் ஏற்படும் ஓர் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஆனது, ஆஸ்துமா அறிகுறிகளை ஏற்படுத்தும். அப்படி என்னென்ன உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆனது, உணவுகளில் உள்ள குறிப்பிட்ட புரதங்களுக்கு, அதிகப்படியாக செயல்படும்போது உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே, உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், சில உணவுகளுக்கான உங்கள் எதிர்வினையை நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால், அவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். இருப்பினும், உங்கள் உணவில் இருந்து சில உணவுகளை அகற்ற நீங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில உணவுகளின் மேல் உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை அறிய உங்கள் மருத்துவர் தோல் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
காபி மற்றும் தேநீர்:
காபி, தேநீர் மற்றும் சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் காணப்படும் சாலிசிலேட்டுகள் சில ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அதிக அளவில் காஃபினைன் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.
பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ்:
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், வாயுவை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இத்தகைய உணவுகள் உங்கள் உதரவிதானத்தில் (ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே உள்ள சவ்வு) அழுத்தம் கொடுக்கலாம். மேலும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்தி ஆஸ்துமா எரிப்புகளைத் தூண்டும். இந்த உணவுகளில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், வெங்காயம், பூண்டு மற்றும் வறுத்த உணவுகள் ஆகியவை அடங்கும்.
உலர்ந்த பழங்கள்:
பல வகையான உலர்ந்த பழங்களில் சல்பைட்டுகள் அடங்கும். இது ஆஸ்துமாவை மோசமாக்கும் ஒரு வகை ப்ரீசர்வேட்டிவ் ஆகும். ஊறுகாய்கள், எலுமிச்சை சாறு, மற்றும் பாட்டில் வைத்திருக்கக் கூடிய எலுமிச்சை சாறு ஆகியவற்றிலும் சல்பைட்டுகள் காணப்படுகின்றன.
ஒயின் அல்லது பீர்:
ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றில் ப்ரீசர்வேட்டிவ் உள்ளன. குறிப்பாக, சல்பைட்டுகள் போன்ற ப்ரீசர்வேட்டிவ். மதுவில் உள்ள ஹிஸ்டமைன்கள் கண்களில் நீர், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இறால்:
உறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறால் ஆனது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும். இதற்கு காரணம் அதில் உள்ள சல்பைட்டுகள் தான். ஷெல் பிஷ் என்பது ஒரு பொதுவான உணவு ஒவ்வாமை ஆகும். மேலும், இந்த ஷெல் பிஷ் குடும்பத்தை சேர்ந்த ஓட்டுமீன்கள் குழுவானது (இறால், இரால் மற்றும் நண்டு) அதிக எண்ணிக்கையிலான ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக