-------------------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
-------------------------------------------------------------
அமலா : டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்-னு அகோரப்பசி ஏற்பட்டு போச்சு! நிறைய நிறைய சமைச்சு போடுறேன்... அவ்வளையும் சாப்பிட்டுக்கிட்டே இருக்காரு. அதுவும் பத்தலன்னு கீழ கிடக்குற குப்பைக்கூளங்களையும் எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுட்டாரு. என்னன்னு பாருங்களேன்...
டாக்டர் : சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்காரு..?
அமலா : ஒரு வாரமா இப்படி இருக்காரு டாக்டர்..
டாக்டர் : இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலயே இங்கே கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே?
அமலா : இல்ல டாக்டர்... வீடு பூரா கொஞ்சம் சுத்தமாகட்டுமேன்னு காத்துக்கிட்டிருந்தேன்.
டாக்டர் : 😬😬
-------------------------------------------------------------
வர்ஷினி : நானும் பாத்துக்கிட்டு வரேன்... திருச்சியிலிருந்து மெட்ராஸ் வர்றீங்க... எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்குறீங்க, மொத்தமா வாங்கிக்க வேண்டியதுதான?
துர்க்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.
வர்ஷினி : 😆😆
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
-------------------------------------------------------------
எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும்,
குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்று ஒருவன் விடாப்பிடியாக இருந்தால் அவன் நினைத்ததை கட்டாயம் சாதிப்பான்.
தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை, இழந்தவனுக்கே பிரிவின் அருமை,
எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை என ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை....
உன் எல்லை எதுவென்று உன்மனதுக்கு தெரியும்போது
அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய கவலை உனக்கெதற்கு...
மனம் தளரும் போது கண்ணாடி முன் நில்லுங்கள்...
அதில் தெரிபவர் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வல்லவர்...!
-------------------------------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------------------------------
கைதிகளுக்கு பிடிக்காத பட்டாசு என்ன?
.
.
.
.
கம்பி மத்தாப்பு...🎊🎊
உண்ணாவிரத தொண்டர்கள் மயங்கி விழுந்துட்டாங்களாமே!... ஏன்?
.
.
.
.
உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டு... 😴😴
-------------------------------------------------------------
குறளும், பொருளும்...!!
-------------------------------------------------------------
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
பொருள் :
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக