Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 5 அக்டோபர், 2020

மிதுன ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். புதனுடன் செவ்வாய் பகை கொண்டு நிற்கின்றார். பகைப்பெற்ற கிரகம் தன்னுடைய வலிமையில் பாதி இழந்த நிலையில் இருப்பதால் செவ்வாயால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

 

 எடுத்த காரியத்தை முடிப்பதில் வேகம் உடையவர்கள்.

 

 பல துறைகளை பற்றிய அறிவை உடையவர்கள். 

 

 குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றக்கூடியவர்கள்.

 

 தன் மனதிற்கு பிடித்தவர்களிடம் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும்.

 

 உடலில் தழும்புகள் மற்றும் காயங்களை உடையவர்கள்.

 

 நிலையற்ற எண்ணங்களை உடையவர்கள்.

 

 இனிமையான பேச்சுகளுடன் முரட்டுச் சுபாவமும் உடையவர்கள்.

 

 வம்பு வழக்குகளால் தன் பெயரை தானே கெடுத்துக் கொள்வார்கள்.

 

 பிறருடைய பிரச்சனைகளில் தலையிட்டு தானே வம்பில் மாட்டிக் கொள்வார்கள். 

 

 கடன் வாங்கி செலவு செய்வதில் வல்லவர்கள். அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.

 

 கிடைக்கும் லாபத்தை சேமிப்பதில் விருப்பம் இல்லாதவர்கள். 

 

 ஒருவர் மீது கொண்ட விருப்பத்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்யக்கூடியவர்கள். 

 

 சகோதரர்களுடன் சாதகமற்ற சூழலே உண்டாகும்.

 

உடல் நலத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக