
கூகிள் மேப்ஸ் பொய் சொல்லாது என்று கண்மூடித்தனமாக நம்பும் சிலருக்கு, இந்த செய்தி நடைமுறையில் ஏற்படக்கூடும் சிக்கலின் உண்மையை போட்டு உடைதுள்ளது என்பதை நம்ப சற்று கடினமாக இருக்கலாம். இன்னும் சில அனுபவசாலிகளுக்கு இந்த செய்தி, ''இப்படியெல்லாம் ஒரு நாள் நடக்குமென்று எங்களுக்கு தெரியும்'' என்ற ஒரு மனநிலையை உருவாகலாம். எது எப்படியாக இருந்தாலும் கூகிள் மேப்ஸ் மீது எப்பொழுதும் முழு நம்பிக்கை வைக்காதீர்கள்.
கூகிள் மேப்ஸ் காரணமாக நிகழ்ந்த சிக்கல் சம்பவங்கள்
கூகிள் மேப்ஸ் பயன்படுத்தும் மக்களில் சிலர் தங்களின் சரியான இலக்கை அடைவதற்கு பல நேரங்களில் சிலவிதமான சிக்கல்களைச் சந்தித்திருப்பார்கள். உலகெங்கிலும் இதுபோன்ற பல சிக்கல் சம்பவங்கள் கூகிள் மேப்ஸ் காரணமாக நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலும் இப்படி ஒரு சிக்கல் சம்பவம் இப்பொழுது நடந்துள்ளது, இந்த சம்பவம் இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மிகவும் மோசமான கூகிள் மேப்ஸ் சம்பவமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய டாடா ஹாரியர் எக்ஸ்எம் காரின் நிலை
இந்த சம்பவம் T-Bhp இல் ஷிஷிர் 333 ஆல் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அவரின் நெருங்கிய நண்பருக்கு நிஜத்தில் நடந்துள்ளது. புதிய டாடா ஹாரியர் எக்ஸ்எம் காரின் உரிமையாளர் புனேவிலிருந்து ஜபல்பூருக்கு இரவில் பெற்றோருடன் பயணம் செய்திருக்கிறார்.
கூகிள் மேப்ஸின் உதவி
காரின் உரிமையாளர் முதன்முறையாக இதுபோன்ற நீண்ட தூரப் பயணத்தைச் சொந்த வாகனத்தில் மேற்கொண்டிருக்கிறார், பாதைகள் சரியாகத் தெரியாத காரணத்தினால் கூகிள் மேப்ஸ் பயன்படுத்தியிருக்கிறார். கூகிள் மேப்ஸின் உதவியுடன் காரின் உரிமையாளர் புனேவிலிருந்து காலை 9 மணிக்குத் கிளம்பி பயணத்தைத் துவங்கியிருக்கிறார்.
கூகிள் மேப்ஸ் ரூட்டை மாற்றியது
நீண்ட பயணம் என்பதனால் அன்றிரவு நாக்பூரில் நிறுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார், கூகிள் மேப்ஸின் தகவல் படி, அவர் அன்றிரவு 11 மணிக்குள் இலக்கை அடைந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவான வழி என்று கூகிள் மேப்ஸ் ரூட்டை மாற்றி காட்ட, இவரும் கண்மூடித்தனமாக அந்த பாதையில் பயணித்திருக்கிறார்.
கூகிள் மேப்ஸ் சொன்ன சரியா தான் இருக்கும்
கூகிள் மேப்ஸ் காட்டிய மாற்று வழி, அமராவதிக்கு அருகிலுள்ள பிரதான சாலையிலிருந்து திசை திருப்பப்பட்டு, இருண்ட மற்றும் குறுகிய சாலை கொண்ட மோசமான பாதையில் அவரை செல்லும்படி கூகிள் மேப்ஸ் வழி நடத்தியுள்ளது. கூகிள் மேப்ஸ் சொன்ன சரியா தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் அதிகம் யோசிக்காமல் மாற்று வழியைப் பின்பற்றியிருக்கிறார்.
மோசமாகச் சேதமடைந்த பாலம்
சாலைகள் நல்ல நிலையில் இல்லை என்பதை உணர்ந்தும் அவர் கூகிள் மேப்ஸ் மீதான நம்பிக்கையில் முன்னேறி செண்டிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ தூரத்தைக் கடந்த பிறகு அந்த வழியிலிருந்த பாலம் சேதமடைந்துள்ளதைக் கவனித்திருக்கிறார். மோசமாகச் சேதமடைந்த பாலத்தின் இடதுபுறத்திலிருந்த வழியில் சென்ற காரின் டயர்களில் பிடிப்பு இழந்து, வாகனம் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது.
அதிகாலை 2:30 மணிக்கு உதவி
சுமார் 30 நிமிடங்கள் பள்ளத்திலிருந்து வெளியேற முயன்றும் பயனில்லாமல் வாகனம் ஆழமான சேற்றில் சிக்கிக்கொண்டது. எஞ்சின் சூடாகி புகை வந்துவிட்டது, கிளட்ச் எரியும் வாசனையும் வந்திருக்கிறது, ஹெட்லேம்ப்களும் வேலை செய்யாமல் போனது என்று உரிமையாளர் கூறியுள்ளார். அதிகாலை 2:30 மணிக்கு சாலையோர உதவி கிடைத்த பின்னர் ஹெட்லேம்ப் இல்லாமல் நகரத்திற்கு வந்துள்ளனர்.
கண்மூடித்தனமாகப் பயணம் செய்யாதீர்கள்
கூகிள் மேப்ஸ் எப்பொழுதும் நகரத்திற்குள் சரியான வழியைத் தான் காண்பிக்கிறது. சில நேரங்களில் இப்படியான சிக்கல்கள் நடப்பதைத் தவிர்க்க நீங்கள் செல்லும் பாதையை ஒருமுறை பார்த்துவிட்டுப் பயணிக்கத் துவங்குங்கள். முழுமையாகக் கூகிள் மேப்ஸை நம்பி, கண்மூடித்தனமாகப் பயணம் மேற்கொண்டு தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக