Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 அக்டோபர், 2020

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை நிறுத்தும் ICICI Bank! காரணம் என்ன?

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை நிறுத்தும் ICICI Bank! காரணம் என்ன?

இலங்கை நாணய ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் இலங்கையில் அக்டோபர் 25ஆம் தேதியன்று தனது வங்கியின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கோரிக்கையை பரிசீலித்து, இலங்கையில் வங்கியின் வணிக நடவடிக்கைகளை மூடுவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக வங்கி தெரிவித்துள்ளது. அதோடு, இலங்கையில் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் (The Monetary Board of the Central Bank of Sri Lanka) ஒப்புதல் அளித்துள்ளது என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வங்கி மேற்பார்வை இயக்குநர் நாணய வாரியம் விதித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சரிவர நிறைவேற்றியுள்ளதாக அந்த வாரியம் திருப்தி அடைந்துள்ளது. இலங்கையில் வங்கியின் சேவைகளையும், வணிகத்தையும் செயல்படுத்த வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமம் 2020 அக்டோபர் 23 முதல் ரத்து செய்யப்படுகிறது" என்று மிகப் பெரிய தனியார் வங்கியான ICICI  தெரிவித்துள்ளது.  

ஐசிஐசிஐ வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக