Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 24 அக்டோபர், 2020

Infinix ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் கம்மி விலையில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

 இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்

Infinix நிறுவனம் இன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடலான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டின் விலை மற்றும் விற்பனைக்கு கிடைக்கும் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓஷன் வேவ், அம்பர் ரெட், அப்சிடியன் பிளாக் மற்றும் மூன்லைட் ஜேட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் கூடுதல் மதிப்பு கூட்டப்பட்ட இ-வாரண்ட்டி உடன் வருகிறது. இந்த இ-வாரண்ட்டி சாதனத்தின் உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் தேதியைக் காட்டுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள்

  • 6.78' இன்ச் எச்டி பிளஸ் பின்-ஹோல் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி70 ஆக்டா கோர் பிராசஸர்
  • எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
  • எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்

குவாட் கேமரா அமைப்பு

  • AI குவாட் கேமரா அமைப்பு
  • 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 சிஎம் மேக்ரோ லென்ஸ்
  • இரண்டு 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்கள்
  • 8 மெகா பிக்சல் செல்பி கேமரா
  • கைரேகை சென்சார்
  • வைஃபை
  • டூயல் 4 ஜி வோல்ட்-இ
  • ஜி.பி.எஸ்
  • புளூடூத்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • 10W சார்ஜிங் ஆதரவு
  • 5,200 mAh பேட்டரி

விலை மற்றும் விற்பனை விபரம்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடலான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,999 என்று விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 29ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக