ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இப்போது, ஒப்போ நிறுவனம் OPPO K7x என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 5ஜி
ஒப்போ நிறுவனம் தற்பொழுது தனது வெய்போ கணக்கில் வெளியீட்டுள்ள விளம்பர போஸ்டரில், ரோபோவின் புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும், புதிய சாதனத்தின் பின்புறத்தில் மேல் இடது மூலையில் குவாட் கேமரா அமைக்கப்பட்டுள்ளது போன்ற டிசைனையும் காட்டியுள்ளது.
OPPO PERM00 ஸ்மார்ட்போன்
சமீபத்தில் TENAA இல் காணப்பட்ட OPPO PERM00 ஸ்மார்ட்போன் மாடல், ஒப்போ K7x ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெளியாகியுள்ள பட்டியல் தகவலின் படி, வரவிருக்கும் ஒப்போ போன் 6.5' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் வருகிறது. சாதனம் அறியப்படாத 2GHz ஆக்டா கோர் பிராசஸர் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oppo K7x ஸ்டோரேஜ்
புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும்.
கேமரா விபரம்
புதிய Oppo K7x ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, ஒரு 8 மெகாபிக்சல் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா சென்சார்களுடன் கூடிய குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது கிறீன், க்ரெய் மற்றும் ப்ளூ வண்ணங்களில் அறிமுகமாகும்.
இந்தியர்கள் காத்திருக்கலாம்
இந்த சாதனம் 4,910 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் நவம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது கிடைக்குமென்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக