Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 அக்டோபர், 2020

Ph.D-ன்ன என்ன?... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

-------------------------------------

மனைவி : பந்தியில பூரிக்கு சட்னியும், பொங்கலுக்கு கிழங்குமாக மாத்திப் பரிமாறாங்களே... என்ன விஷயம்? 

கணவன் : நடப்பது கலப்புத்திருமணமாம்... 

மனைவி : 😉😉

-------------------------------------

  மேலாளர் : நீ என்ன படிச்சிருக்க?

அருண் : நான் Ph.D படிச்சிருக்கேன்.

மேலாளர் : Ph.D-ன்னா என்ன?

அருண் : Passed Highschool with Difficulty

மேலாளர் : 😠😠

-------------------------------------

கணவன் : குட்டிம்மா... நாளைல இருந்து நீ, தையல் வகுப்பு எல்லாம் போக வேணாம்...

மனைவி : என்னங்க... திடீர்னு இப்படி சொல்றீங்க. சேத்துவிட்டதே நீங்கதான?

கணவன் : உண்மைதான்... ஆனா, நீ பகல்ல எல்லாம் தையல் மிஷினை மிதிச்சிக்கிட்டு, பழக்க தோஷத்துல ராத்திரியான, தூக்கத்துல என்னை போட்டு மிதிக்குற, அதான்...

மனைவி : 😆😆

-------------------------------------

நட்பு...!!

-------------------------------------

நட்பு எனும் கலையானது,

ஒரு நல்ல இசைக்கருவியை வாசிப்பது போன்றது.

முதலில் விதிகளின்படி இந்த கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.

பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

-------------------------------------

விடுகதை...!!

-------------------------------------

கோவிலுக்குப் போனேன்... கும்பிடு போட்டேன்.

பூவில்லாத இலையை போற்றி வைத்தேன்.

பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.

விதையில்லா கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?

 

விடை:

 

பூ இல்லாத இலை... 🌿வெற்றிலை

 

பழுக்காத காய்... 🥥தேங்காய்

 

விதையில்லாத கனி... 🍌வாழைப்பழம்

-------------------------------------

கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!

-------------------------------------

தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.

 

சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

 

உளி பெருகு சிலை அழகு அலை உலவு கடல் அழகு.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக