Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

உங்ககிட்ட 10 ரூபா நாணயம் இருக்கா? ஓட்டல் பில்லுக்கு 10% தள்ளுபடியாம்!

 

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உணவகம் ஒன்று வெளியிட்டுள்ள வித்தியாசமான சலுகை பற்றி இங்கே காணலாம்.

நமது அன்றாட பணப்புழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், பலரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் இந்த நாணயங்கள் செல்லாது போல என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர். இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்று சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ருபதங்கா சாலையின் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உள்ள உணவகம் நிசர்கா கிராண்ட்.

இதன் உரிமையாளர் கிருஷ்ண ராஜ். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்களது முழு பில் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினால் மொத்த கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமானோர் 10 ரூபாய் நாணயங்களுடன் உணவகத்திற்கு படையெடுத்து வருவதைக் காண முடிகிறது.

இதுபற்றி பேசிய உணவக உரிமையாளர் கிருஷ்ண ராஜ், 10 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பெரும்பாலான வியாபாரங்களில் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

பெங்களூருவில் நடுத்தரமான உணவகம் ஒன்றில் சராசரியாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் அல்லது 10 ரூபாய் நாணயங்கள் தேவைப்படுகின்றன. எனவே நாணயங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது நாளொன்றுக்கு 2,500 நாணயங்கள் எங்கள் உணவகத்திற்கு வருகின்றன. இதனை வியாபார ரீதியாக புழக்கத்தில் விடுகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டால் அனைவரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தொடங்கிவிடுவர் என்றார். இந்த முயற்சிக்கு பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத பிரசாத் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக