Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

டிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.!


டிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.!

அண்மையில் தாய்லாந்து நாட்டில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான தொழில்நுட்ப வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் வெளிவந்தது. மேலும் நவம்பர் 25-ம் தேதி விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 2-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த பின்பு, இதை குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என ட்விட்டர் வழியாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விவோ வி 20, விவோ வி 20 எஸ்இ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ வி 20 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ 20 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 11 இல் இயங்குகிறது. இது 6.44 அங்குல முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவுடன் உள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் வைடு லென்ஸ் + 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என இரட்டை செல்பி கேமரா வசதி உள்ளது.

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மமார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 64 எம்பி கேமரா இருப்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த சாதனத்தின் அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாகவே உள்ளது. ஆனால் 4000 ஏம்ஏஎச் பேட்டரிக்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த சாதனம் வெளிவந்திருந்தால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக