Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! நம்பமுடியாத வேலிடிட்டி.!


ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஆல்

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களையும், அருமையான சலுகைகளையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்நிறுவனம் அதன் ஜியோ போன் பயனர்களுக்காக 3 புதிய ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் ஆண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இது ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஆல் இன் ஒன் திட்டங்களின் பட்டியலில் இணையும் ஆனால் நீண்ட கால செல்லுபடியை

வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அறிமுகமான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகள் ரூ.1,001, ரூ.1,301 மற்றும் ரூ.1,501 என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளன.

மேலும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்களின் வாயிலாக ஜியோ போன் பயனர்கள் ஆண்டுக்கு 504 ஜிபி வரை டேட்டாவைப் பெறலாம் அல்லது 336 நாட்கள் என்கிற செல்லுபடியை பெறலாம். பின்பு இந்த புதிய வருடாந்திர திட்டங்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் விரும்பாத ஜியோ போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகமாகி உள்ளன.

அதன்படி இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.1001 திட்டம் ஆனது தினசரி 150 எம்பி டேட்டாவுடன் மொத்தம் 49 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. பின்பு குறிப்பிட்ட டேட்டா வரம்பை மீறிய பின்னர் இணைய வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆகக் குறைக்கப்படும். இவற்றின் டேட்டா நன்மையை தவிர்த்து வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகள், ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 12,000 இலவச நிமிடங்கள் கிடைக்கும். இதனுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவையும் பெறுவீர்கள். குறிப்பாக 336 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

அடுத்து ரூ.1,301 ஆல் இன் ஒன் வருடாந்திர திட்டமானது தினசரி 500எம்பி என்கிற டேட்டா வரம்புடன்மொத்தம் 164 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மீதிமுள்ள நன்மைகள் ரூ.1,001 திட்டத்துடன் ஒற்றுப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1,501 ஆல் இன் ஒன் வருடாந்திர திட்டமானது தினசரி 1.5ஜிபி அளவிலான டேட்டா என மொத்தம் 504 ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பிட்ட டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் இணைய வேகம் குறைக்கப்படும். மேலும் இந்த ரூ.1501 திட்டத்தின் மீதமுள்ள நன்மைகள் மற்ற இரண்டு திட்டங்களை போலவே இருக்கும்.

ஏற்கனவே ஜியோ நிறுவனம் நான்கு ஆல் இன் ஒன் திட்டங்களை ரூ.75 முதல் ரூ.185 வரை கொண்டுள்ளது. அவைகள் 28 நாட்கள் என்கிற செல்லுபடி மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவுடன் மொத்தம் 56ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன. மேலும் ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 12,000 நிமிட FUP க்கு பதிலாக, இந்த ஆல் இன் ஒன் திட்டங்கள் 500 நிமிடங்கள் என்கிற FUP-ஐ வழங்குகின்றன. குறிப்பாக ரூ.185 மற்றும் ரூ.155 திட்டங்கள் மட்டுமே தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக