இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் பல கோடி பட்ஜெட் குடும்பங்கள் தவித்து வரும் இந்த வேலையில் உணவுப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாமல் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை வாசி நடுத்தரக் குடும்பங்களை அதிகளவில் பாதித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன் இந்திய மக்களின் அடிப்படை உணவுப் பொருட்களான வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் சாமானிய மக்களைப் பாதிக்கும் அடுத்த பிரச்சனை வந்துள்ளது.
இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை எப்போது இல்லாத அளவிற்கு இந்த வருடம் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியக் குடும்பங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமையல் எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள காரணத்தாலும், இந்தியாவில் அதிகளவிலான சமையல் எண்ணெய் இறக்குமதி மூலம் தேவையைப் பூர்த்தி செய்யப்படுவதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வருடத்தில் நிலக்கடலை, கடுகு, வனஸ்பதி, பனை, சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் விலை சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
அமித் ஷா
சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தலைமையிலான குழு ஆலோசனை செய்துள்ளது.
இதனால் அடுத்தச் சில வாரத்தில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30,000 டன் வெங்காயம்
இந்தியாவில் வெங்காயம் விலை கட்டுப்படுத்த மத்திய அரசு அண்டை நாடுகளில் இருந்து சுமார் 30,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது, இதேபோல் உருளைக்கிழங்கு-ன் விலை கட்டுப்படுத்தவும் அதிகளவில் இறக்குமதி செய்தது மூலம் விலைவாசி குறைந்து வருகிறது.
ஆனால் தற்போது சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய மக்கள் மத்தியில் புதிய பிரச்சனையாக உள்ளது.
மலேசியா
கடந்த 6 மாதமாக மலேசியாவில் பாமாயில் விலை அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் ஆசிய சந்தையில் விநியோகம் குறைந்து இதன் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலி காரணமாகவே இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
70 சதவீதம்
இந்தியாவின் உணவு சங்கிலியில் எண்ணெய் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதம் பாமாயில் பயன்படுத்தும் காரணத்தால், இதன் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களைப் பெரிய அளவில் பாதித்து வருகிறது.
இறக்குமதி வரி
சமையல் எண்ணெய் விலை உயர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியைக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக