குளிரூட்டும் பெட்டி வசதி அடங்கிய மூன்று சக்கர வாகனங்களை தயாரிக்க இருப்பதாக இந்திய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஒமெகா சீக்கி மொபிலிட்டி பிரைவேட் லமிடெட் (Omega Seiki Mobility Pvt Ltd), இது ஓர் இந்தியாவை மையமாகக் கொண்டு வாகனங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வாகனங்களுக்கான உதிரி பாகம் மற்றும் உடற்பாகம் உள்ளிட்ட முக்கிய கூறுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதுதவிர வர்த்தக ரீதியில் பயன்படக்கூடிய வாகனங்களையும் தயாரித்து வருகின்றது.
இதுவே மிக விரைவில் குளிர்சாதனப் பெட்டி வசதி அடங்கிய வாகனங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் அடிப்படையில் முதலில் மூன்று சக்கர வாகனத்தில் (ஆட்டோ) குளிர்சாதன வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அதாவது, ஆட்டோக்களில் பதப்படுத்தும் கண்டெய்னர் வசதியை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.
பொதுவாக, பெரிய டிரக்குகளிலேயே பொருட்களைப் பதப்படுத்தும் குளிர்சாதன வசதி வழங்கப்படும். இதனையே முதல் முறையாக சிறிய ரக வாகனத்திலும் அறிமுகம் செய்யும் முயற்சியில் ஒமெகா சீக்கி களமிறங்கியுள்ளது. இதற்காகவே டிரான்ஸ் ஏசிஎன்ஆர் (Transport Air-Conditioning and Refrigeration) எனும் நிறுவனத்துடன் அது தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.
இதுகுறித்து, நேற்று (வியாழக்கிழமை) அது வெளியிட்ட தகவலில், டிரான்ஸ் ஏசிஎன்ஆர் உடன் இணைந்தே குளிர்சாதன பெட்டி (container) கொண்ட வாகனங்களைக் கட்டமைக்க இருப்பதாக அது கூறியுள்ளது. முதலில், பதப்படுத்தும் வசதிக் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவை கான்செப்ட் (முன்மாதிரி) மாடலாக அறிமுகம் செய்ய இருப்பதாக அது கூறியிருக்கின்றது.
இதனை, குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகளால் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்க இருப்பதாக அது கூறியிருக்கின்றது. இதன் பணிகளுக்காகவே இரு நிறுவனங்கள் கூட்டணி வைத்திருக்கின்றன. ஆகையால், இவர்கள் இருவர்களும் இணைந்தே வாகனங்களுக்கான டிசைன், பதப்படுத்தும் கண்டெய்னர் வரை அனைத்தையும் வடிவமைக்க இருக்கின்றனர்.
இந்த வாகனங்கள் எதிர்காலத்தில் பழங்கள், பூக்கள் மற்றும் பிற பதப்படுத்த வேண்டிய பொருட்களைக் கையாளப் பயன்படுத்தப்பட இருக்கின்றன. குறிப்பாக, கோவிட் 19 வைரசுக்கான மாற்று மருந்து மற்றும் பிற மருத்துவப் பொருட்களைக் கையாளவும் இந்த வாகனங்கள் உதவும் என ஒமெகா சீக்கி கூறியுள்ளது.
இந்த நிறுவனம், நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ரேஜ் மற்றும் ரேஜ் எலெக்ட்ரிக் ஆகிய மூன்று சக்கர வாகனங்களை முதல் முறையாகக் காட்சிப்படுத்தியது. இவற்றின் அடிப்படையிலேயே குளிரூட்டும் அறையுடன் ஆட்டோ ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக