Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

30 வருடம் கழித்து ரீமேக்காகும் பி வாசுவின் ஹிட் படத்தில் விஜய்.. தளபதி இந்த கேரக்டருக்கு செட் ஆவாரா?

30 வருடம் கழித்து ரீமேக்காகும் பி வாசுவின் ஹிட் படத்தில் விஜய்.. தளபதி இந்த  கேரக்டருக்கு செட் ஆவாரா? - Cinemapettai

நீண்ட நாட்களாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க ஆசைப்படும் பி வாசுவின் கனவு விரைவில் நிறைவேற இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

பி வாசு 30 வருடங்களுக்கு முன் எடுத்த சூப்பர் ஹிட் படம் ஒன்றில் ரீமேக்கை தற்போது உருவாக்க ஆசைப்படுகிறாராம். அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என தற்போது அவரிடம் இந்த தகவலை கொண்டு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.

பி வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டடித்த திரைப்படம் நடிகன்.

இந்த படத்தில் சத்யராஜ் கவுண்டமணி ஆகியோருடனான காமெடி காட்சிகள் இன்றும் பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து தளபதி விஜய்யிடம் நடிகன் படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பமா என கேட்க உள்ளாராம் இயக்குனர் பி வாசு.

தளபதி விஜய் தற்போது தளபதி65 படத்திற்காக இயக்குனர்கள் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பி வாசுவும் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறாராம்.

நடிகன் படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரத்திற்கு விஜய் சரியான தேர்வாக இருப்பாரா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!