Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

40 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்படவுள்ள சூப்பர் ஹிட் படம்.. வடிவேலுவின் ஹீரோ வாய்ப்பை தட்டி தூக்கிய சந்தானம்!

 40 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்படவுள்ள சூப்பர் ஹிட் படம்.. வடிவேலுவின்  ஹீரோ வாய்ப்பை தட்டி தூக்கிய சந்தானம்! - Cinemapettai

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் ஹிட் அடித்த படங்களையெல்லாம் தற்போது ரீ கிரியேட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் சில இயக்குனர்கள். அதில் சில படங்கள் வெற்றி பெறுவதும் உண்டு.

அந்த வகையில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து மெகா ஹிட்டான ‘ருத்ரதாண்டவம்’ என்னும் நகைச்சுவைத் திரைப்படத்தை, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி எடுக்கவிருக்கிறாராம் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

அதாவது, சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை கொண்டு, மிகவும் நகைச்சுவையான முறையில் ‘ருத்ரதாண்டவம்’ படம் அமைந்திருந்தது. இந்தப் படத்தைத்தான் தற்போது சக்தி மறு உருவாக்கம் செய்து இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே சக்தி சிதம்பரம் இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், மகாநடிகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

தற்போது சக்தி, யோகிபாபு கதாநாயகனாகக் கொண்டு ‘பேய்மாமா’ என்ற நகைச்சுவை படத்தை இயக்கி வருகிறார் என்பதும், விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருப்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் சக்தி சிதம்பரம் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டாராம். மேலும் சக்தி சிதம்பரம் ருத்ர தாண்டவம் படத்தை ‘ருத்ரதாண்டவம் 2021’ என்ற பெயரில் மீண்டும் ரீ- கிரியேட் செய்ய திட்டமிட்டு, இதற்காக ஒரு பட அதிபருடன் யோசனை கேட்டிருக்கிறார்.

மேலும் விகே ராமசாமி கதாபாத்திரத்தில் (சிவன் வேடம்) வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று அந்த பட அதிபர் கூறிய போது, வடிவேலுவின் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வழக்குகள் இருப்பதால் அதை மறுத்து விட்டாராம் சக்தி . தற்போது ருத்ரதாண்டவம் 2021 படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

எனவே, இவ்வாறு 40 ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் பெறவுள்ள ‘ருத்ரதாண்டவம்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே அதிக அளவு ஏற்பட்டிருக்கிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக