Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

48எம்பி கேமராவுடன் அசத்தலான ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹை-ரெஸ் ஆடியோவுடன்

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.24,600-ஆக உள்ளது. பின்பு வரும் நவம்பர் 27-ம் தேதி Amazon UK வழியாக இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது. மேலும டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120Hz screen refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சில அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U சிப்செட் உடன் மாலி-ஜி57 எம்சி3 ஜிபியு ஆதரவு இடம்பெற்றுள்ளது. எனவே இது கேமிங் மற்றும் ஆப் வசதிகளை பயன்படுத்த வேகமாகவும், சிறப்பாகவும் செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி B&W லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


ரியல்மி 7 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் Dart Charge பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் மற்றும் 195 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக