Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்: நவம்பர் 30 அறிமுகமாகும் மோட்டோ ஜி 5ஜி!

மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோரோலா சமீபத்திய ஜீ தொடர் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி மற்றும் மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை டிப்ஸ்டர் சமீபத்தில் தெரிவித்தது.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

இந்தநிலையில் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை மோட்டோரோலா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் பிளிப்கார்ட்டில் இந்த சாதனம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

மோட்டோ ஜி 5ஜி எதிர்பார்க்கப்படும் விலை:

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,150 ஆக இருக்கலாம், மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன் விலை சுமார் ரூ.17,500 ஆக இருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விலையில் அதிக மாற்றம் இருக்காது. விரைவில் அதிகாரப்பூர்வ விலை வெளியாகும்.

6.7 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ்

மோட்டோ ஜி 5ஜி எச்டிஆர் 10 ஆதரவுடன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் மேக்ஸ் விஷன் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும்.

மோட்டோ ஜி 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்கும். மோட்டோ ஜி 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் இதில் உள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக