Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 நவம்பர், 2020

மற்றொரு கொடிய நோய் அவதாரம்: 70,000 கோழிகளை கொல்ல உத்தரவு!

 

கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக் 70000 கோழிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சுமார் 11 மாதங்களாக உலகம் முழுக்க மனித இனமே கொரோனாவுடன் போராடி வருகிறது. இதற்கிடையே பல்வேறு கொடிய நோய்களும் பரவி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜெர்மனியில் கோழிப் பண்ணைகளில் கொடிய பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 70,000 கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் மெக்லென்பர்க் மாகாணத்தில் ரோஸ்டோக் என்ற இடத்திற்கு அருகே இருக்கும் கோழிப் பண்ணையில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த பண்ணையில் உள்ள 4,500 கோழிகள் கொல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே பண்ணை நிர்வாகத்துக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் இருப்பதால் 70,000 கோழிகள் வரை கொல்லப்படலாம் என பண்ணையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கோழிகளை கொலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மெக்லென்பர்க் மாகாணத்தில் மற்றொரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 16,100 வான்கோழிகள் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, டென்மார்க் நாட்டிலும் பறவைக் காய்ச்சல் பரவுவதால் 25,000 கோழிகளை கொலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் கோழிக் கறி மற்றும் முட்டை ஏற்றுமதி அடுத்த மூன்று மாதங்களுக்கு பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக