Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 நவம்பர், 2020

இறந்து 45 நிமிடத்தில் உயிர் வந்தது: இந்த அதிசயத்தை பாருங்க!

இறந்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பெற்ற அமெரிக்கர்.

அமெரிக்காவில் மவுண்ட் ரெயினியெர் தேசிய பூங்காவில் மைக்கேல் நபின்ஸ்கி (வயது 45) என்ற மலை ஏறுபவர் கடும் குளிர் நிலையில் தொலைந்துவிட்டார். பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு வாஷிங்டன் மாகாணம் சியாட்டிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது அவருக்கு இதய துடிப்பு இருந்தது. பின்னர் எமர்ஜென்சி அறையில் வைத்திருந்தபோது அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


இறந்த மைக்கேலுக்கு மருத்துவக் குழுவினர் சிபிஆர் சிகிச்சை வழங்கினர். சுமார் 45 நிமிடங்களுக்கு பின் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு தினங்களுக்கு பிறகு மைக்கேல் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டார்.

மைக்கேல் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவருக்கு லேசான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போதை பழக்கத்திற்கு அடிமையாகி, அதன்பிறகு அதில் இருந்து மீண்டு மலை ஏறத் தொடங்கியதாக ஊடகங்களிடம் மைக்கேல் தெரிவித்துள்ளார்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!