Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 நவம்பர், 2020

சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரை துவையல் செய்ய !!

Murungai Keerai Thogayal
 

தேவையான பொருள்கள்: 

 

முருங்கைக் கீரை - 1 கப் (துளிர்)  

உ. பருப்பு - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 10

புளி - சிறிதளவு 

வெங்காயம் - 1 

உப்பு - தேவையான அளவு 

பூண்டு - 4 பல் 

கடுகு - 1/2 ஸ்பூன் 

எண்ணெய் - 1/2 ஸ்பூன்.

 

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு ஆகியவை
  பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

 

பிறகு அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும். 

 

பின்னர் இந்த கலவையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை தனியாக ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரை துவையல் தயார். இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!