Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

நோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!

75-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 32-இன்ச் ஃபுல் எச்டி, 43-இன்ச், 55-இன்ச், 58-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

75-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை EUR 1,399 (இந்திய மதிப்பில் ரூ.1,23,300) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 75-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல் ஐரோப்பிய சந்தைகளில் வரும் டிசம்பர் 1-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மற்ற டிவி மாடல்களின் விலைகளைப் பார்ப்போம்.

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகளின் விலை

நோக்கியா 32-இன்ச் டிவியின் விலை EUR 399.90 (இந்திய மதிப்பில் ரூ.35,200)

நோக்கியா 43-இன்ச் டிவியின் விலை EUR 549.90 (இந்திய மதிப்பில் ரூ.48,500)

நோக்கியா 50-இன்ச் டிவியின் விலை EUR 599.90 (இந்திய மதிப்பில் ரூ.52,900)

நோக்கியா 55-இன்ச் டிவியின் விலை EUR 699.90 (இந்திய மதிப்பில் ரூ.61,700)

நோக்கியா 65-இன்ச் டிவியின் விலை EUR 899.90 (இந்திய மதிப்பில் ரூ.79,300)

நோக்கியா 58-இன்ச் டிவியின் விலை EUR 799.90 (இந்திய மதிப்பில் ரூ.70,500)

 

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் 1920 × 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 178-degree viewing angle மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் நோக்கியா 43-இன்ச், 55-இன்ச், 58-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் 4கே டிஸ்பிளே மற்றும் 3840 × 2160 பிக்சல் தீர்மானம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் 178-degree viewing angle மற்றும் Dolby Vision ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஐந்து நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஏஆர்எம் சிஏ55 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி 470எம்பி3 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளன. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுள்ளன இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகள். ஆனால் 32-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மட்டும் 1ஜிப ரேம் மற்றும 8ஜிபி மெமரியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நோக்கியா ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு வைஃபை 802.11 அ / பி / ஜி / என் (2.4GHz), புளூடூத் 4.2, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

ஆடியோ வசதி

65-இன்ச் மற்றும் 75-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவிகள் 24W ஸ்பீக்கர் மற்றும் Dolby Digital Plus மற்றும் DTS surround ஆதரவைக் கொண்டுள்ளன.

32-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது 12 வாட் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது.

43-இன்ச், 50-இன்ச்,55-இன்ச் மற்றும் 58-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 20 வாட் ஸ்பீக்களை கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் இந்த மாத துவகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Nokia Streaming Box 8000 உடன் பேக்லிட் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக