Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

இது எப்படி இருக்கு?... கலக்கலான காமெடிகள்... படிங்க சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

---------------------------------------------------

பேரன் : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படி கூப்பிடுவாங்க.

தாத்தா : நொண்டி நாய்-னு... இல்லைன்னா மூனுகால் நாய்-னு கூப்பிடுவாங்க.

பேரன் : இல்ல... நய்-னு கூப்பிடுவாங்க.

தாத்தா : 😠😠

---------------------------------------------------

தனுஷ் : உன் வயது பதினெட்டுதான.

விஷ்ணு : எப்படி சரியா கண்டுபிடிச்ச?

தனுஷ் : ஓர் அரை லூசின் வயது ஒன்பது.

விஷ்ணு : 😩😩

---------------------------------------------------

இது எப்படி இருக்கு?

---------------------------------------------------

பாவம்யா பசங்க...

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை...?

 

அது மாணவர்களின் தவறு கிடையாது,

அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..

வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய குறை..

 

உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..

 

1. ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுக்கிழமைகள்..

மற்ற நாள்கள் 313 (365-52=313).

 

2. கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஷ்டம்.

மீதி 263 நாள்கள் (313-50=263).

 

3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம் என்பதால்

(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).

மீதி 141 நாட்கள் (263-122=141).

 

4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம். வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாட்கள்.

மீதி 126 நாட்கள் (141-15=26).

 

5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம். நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால் 30 நாள்கள்.

மீதி 96 நாட்கள் (126-30=96).

 

6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.

நிறைய பேசினால் நிறைய கற்றுக்கொல்லலாம். 15 நாட்கள் வருகிறது.

மீதி 81 நாட்கள் (96-15=81).

 

7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால், மீதி 46 நாட்கள் (81-35=46).

 

8. காலாண்டு, அரையாண்டு, பண்டிகை தினம், விடுமுறைகள் 40 நாட்கள்..

மீதி 6 நாட்கள்(46-40=6).

 

9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைந்தது 3 நாட்கள்.

மீதி 3 நாட்கள் (6-3=3).

 

10. சினிமா, உறவினர் திருமணம், விழாக்களுக்கு 2 நாள் போய்விடும்.

மீதி ஒரு நாள் (3-2=1).

 

11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..

பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்...?


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக