Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 நவம்பர், 2020

வைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி

poonamallee Vaitheeswaran Koil, Shiva Temple, வைத்தீஸ்வரன் கோயில்  பூவிருந்தவல்லி,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்,Shiva Temples of  Tamilnadu - Paadal Petra Sivasthalangal - An ...

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வைதீஸ்வரர் (கிழக்கு நோக்கியவர்)
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ தையல்நாயகி (தெற்கு நோக்கியவர்)

தல வரலாறு:
பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி திருக் கோவிலாகும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில்.

சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று அங்காரக (செவ்வாய்) நவக்ரக ஸ்தலமுமாகும்.

இது சென்னை நகரில் உள்ள செவ்வாய்க்க்கான நவக்ரக ஸ்தலமுமாகும் (தொண்டை மண்டலம்). கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும். இந்த ஸ்தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த கோவிலின் பிரகாரங்கள் மிகவும் பெரியது. உள் பிரகாரத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ பிரஹ்மா, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ துர்கை ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. இந்த பிராகாரத்தில் ஸ்ரீ ஆதி சங்காரரால் நிறுவப்பெற்ற மூன்று சக்கரங்கள் உள்ளன. அவையாவன: ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம். வடக்கு பிரகாரத்தில் வாசல் நோக்கி பானலிங்கம் உள்ளது. கோவிலின் கோபுரம் கிழக்கு புறமாக இருந்தாலும், பிரதானமும் ராஜகோபுரமுமானது வடக்கு பக்கம் உள்ளது. நுழைவாயில் உள்ள இடத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன.

மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது, கதிரவனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.

அங்காரகன் இந்திரனுக்கு உதவி செய்ததால் அடைந்த சாபம் நீங்க பூஜித்த தலம். வெண்தாமரைச் செல்வி ஆகிய கலைமகள் இறைவனை வழிபட்டதால்-பூவிருந்தவல்லி. பூக்கள் நிறைந்து தண்ணென்று தென்றல் வீசியதால்- பூந்தண்மல்லி. சென்னையில் உள்ள நவக்கிரகத் தலங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

கோயில் கோபுரம் கிழக்கு நோக்கியும், கோயிலும், மூலவரும் வடக்கு நோக்கியும் இருக்கின்றன. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் பாண லிங்கம் ஒன்று வாசலைப் பார்த்து நிற்கிறது. உள்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகிய மூன்று சக்கரங்களும் காட்சியளிக்கின்றன.

கோயில் கோபுரம் கிழக்கு நோக்கியும், கோயிலும், மூலவரும் வடக்கு நோக்கியும் இருக்கின்றன. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் பாண லிங்கம் ஒன்று வாசலைப் பார்த்து நிற்கிறது. உள்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகிய மூன்று சக்கரங்களும் காட்சியளிக்கின்றன.

சிறப்புக்கள் :

செவ்வாய்க்க்கான நவக்ரக ஸ்தலமுமாகும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில்.


போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு
இந்த சிவஸ்தலம் சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் நெடுஞ்சாலையில் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஊர் -- பூந்தமல்லி. இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இதுவே பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் என்பதாகும்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில்.

சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று அங்காரக (செவ்வாய்) நவக்ரக ஸ்தலமுமாகும்.

மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது, கதிரவனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக