Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 28 நவம்பர், 2020

குடையின் கீழ் நடந்த ஏழுபேர்... ஒருவர்கூட நனையவில்லை... எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

-----------------------------------------------------------

பாபு : என்னோட நாலு தம்பிங்க குளத்துல விழுந்துட்டாங்க. ஆனா ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சுது.

கோபு : அப்படியா! மத்த மூனு பேருக்கும் நீச்சல் தெரியுமா?

பாபு : இல்லை. அவங்க எல்லாம் மொட்டைதலை.

கோபு : 😅😅

-----------------------------------------------------------

ரமேஷ் : நாங்க ஏழு பேர் ஒரே குடையின் கீழ் நடந்தோம். ஆனா, ஒருத்தர் கூட நனையல.

சுரேஷ் : அதெப்படி?

ரமேஷ் : ஏன்னா... அப்ப மழையே வரலையே!

சுரேஷ் : 😖😖

-----------------------------------------------------------

வியாபாரி : உங்களுக்கு தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.

கணவன் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியை கூப்பிடுறேன்.

வியாபாரி : 😉😉

-----------------------------------------------------------

பழமொழி அறிவோம்...!

-----------------------------------------------------------

பேச்சு வழக்கு பழமொழி : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..!

 

உண்மை பழமொழி : கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை..!

 

பொருள் :

கழு என்பது ஒருவகையான கோரைப் புல். அதில் தைக்கப்பட்ட பாயில் படுத்து உறங்கும் போது நாசியில் கற்பூரம் போன்ற வாசனை அடிக்கும். இந்த வாசனைக்கு பூச்சிகள் அருகே நெருங்காது. இதனால், குழந்தைகளை பூச்சி கடியில் இருந்து காக்க இந்த பாயை பயன்படுத்தினர். காலப்போக்கில் இது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என மருவிவிட்டது.

-----------------------------------------------------------

இது சிரிப்பதற்கு மட்டுமே...!!

-----------------------------------------------------------

தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் (அயnhழடந) மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக்கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.

 

அவர் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விஷயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டு இருக்குற என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே உள்ளே போய் பார்த்தால் நல்லா தெரியும் என்று. 

 

அவரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். 

 

ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!