Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

தீபாவளி அலப்பறைகள்.. இது என்ன பலகாரம்? சிரிக்க மட்டுமே - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-------------------------------------------------------

ஷாப்பிங் அலப்பறைகள்...!!

----------------------------------------------------

பாலு : தீபாவளிக்கு நாலு பட்டுப்புடவைகள் எடுத்தேன்னு சொன்னீங்களே...! உங்க மனைவிக்கும், மகள்களுக்குமா?

சுந்தர் : இல்லீங்க... மனைவிகளுக்கும், மகளுக்கும்...!

பாலு : 😛😛

----------------------------------------------------

மனைவி : என்னங்க, இந்த வாரம் முழுக்க தீபாவளி ஷாப்பிங்... சினிமா, பீச்னு ஜாலியா போலாங்க...

கணவன் : அடுத்த வாரம் முழுக்க ஒரு ஜோலியா கோவிலுக்கு போகலாம்..?

மனைவி : எதுக்குங்க..?

கணவன் : பிச்சை எடுக்க தான்.

மனைவி : 😏😏

----------------------------------------------------

பாபு : எதுக்கு சார் துணிக்கடையில டாக்டர் இருக்காரு?

தீபக் : அதுவா... மனைவி வாங்கும் புடவையின் விலையை பார்த்து சில கணவர்கள் மயக்கமடைஞ்சு விழுந்துடுறாங்க... அவங்களுக்கு உதவி செய்யதான்...

பாபு : 😆😆

----------------------------------------------------

 

மனைவி : தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்கி தருவதா சொன்னீங்களே... காஞ்சி பட்டா? ஆரணி பட்டா?

கணவன் : ம்ம்ம்ம்... கடன் பட்டு...

மனைவி : 😠😠 

----------------------------------------------------

மனைவி : ஏங்க தீபாவளிக்கு முதல் நாள் தான் புடவை எடுத்து தருவேன்னு சொல்றீங்க?

கணவன் : அப்பதானே நீ செலக்ட் பண்ணுறதுக்குள்ள தீபாவளியே முடிஞ்சுபோகும்.

மனைவி : 😖😖

----------------------------------------------------

ரமேஷ் : என்னது! உங்க மனைவி தீபாவளிக்கு புடவை பக்கத்து வீட்டுக்காரி வாங்குனதுக்கு அப்புறம்தான் வாங்குனாங்களா?

சுரேஷ் : ஆமாம்... அப்பதான் அவளைவிட விலை அதிகமா வாங்க முடியும்...

ரமேஷ் : 😂😂

----------------------------------------------------

இது என்ன பலகாரம்? கண்டுபிடிங்க...!!!

----------------------------------------------------

1. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான். அவன் யார்?

 

2. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது. அது என்ன?

 

3. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம். அவன் யார்?

 

4. 'சீ" என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான். அவன் யார்?

 

5. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான். அவன் யார்?

 

விடைகள் :

1. அதிரசம்

2. போளி

3. பாதுஷா

4. சீடை

5. முறுக்கு

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக