Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 நவம்பர், 2020

தனுசு ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவான் தனது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கம்பீரமான தோற்றமும், செல்வாக்கும் உடையவர்கள்.

🌟 புராணங்கள் பற்றிய ஞானமும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 ஆன்மீக எண்ணங்களை உடையவர்கள். 

🌟 சுயநலமில்லாத பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எந்நிலையிலும் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள். நம்பிக்கைக்குரியவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் எண்ணம் உடையவர்கள். ஆனால், அவர்களின் தகுதிக்கேற்றவாறு உதவி செய்யக்கூடியவர்கள். 

🌟 வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதில் அலாதி பிரியம் உடையவர்கள்.

🌟 வீண் செலவுகளை செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 எதனைப் பற்றியும் கவலைக்கொள்ள மாட்டார்கள்.

🌟 சமயோகிதமாக செயல்பட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடியவர்கள்.

🌟 நித்திரை சுகம் உடையவர்கள். கல்வி அறிவு உடையவர்கள். 

🌟 தாயின் மீது அன்பும் அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவராகவும் இருக்கக்கூடியவர்கள். 

🌟 நோய்கள் மற்றும் அதற்கான மருந்துகள் பற்றிய அறிவு உடையவர்கள். 

🌟 விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய அறிவு உடையவர்கள்.

🌟 ஆன்மீக பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவதில் விருப்பம் உடையவர்கள். 

🌟 நல்ல வசதியான நண்பர்களையும், உறவினர்களையும் உடையவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக